இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று முட்டை மசாலா சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த முட்டை மசாலா சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும் அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைலில் எள்ளு சாதம் செய்வது எப்படி ?
ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த முட்டை மசாலா சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்கள் குழந்தைகள் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று இந்த சுவையான முட்டை மசாலா சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
முட்டை மசாலா சாதம் | Egg Masala Sadam Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 மேசை கரண்டி எண்ணெய்
- 1 பட்டை
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
- ¼ tsp சோம்பு
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 கொத்து கருவேப்பிலை
- ¼ tsp மஞ்சள் தூள்
- 1 tsp மல்லி தூள்
- 1 tsp மிளகாய் தாள்
- ½ tsp சீரக தூள்
- ¼ tsp கரம் மசாலா
- உப்பு தேவையான அளவு
- 3 முட்டை
- சாதம் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிது
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் ஒரு பட்டை, ஒரு ஏலக்காய், இரண்டு கிராம்பு மற்றும் கால் டீஸ்பூன் அளவு சோம்பு சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
- பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள். பின் இதுனுடன் ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போகும் வரை வதக்கி பின்பு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தக்காளி வெந்து நன்கும் மசிந்து வந்ததும் இதனுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா மற்றும் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். பின் மசாலா பொருட்கள் நன்கு எண்ணெயில் வதங்கியதும்.
- பின் கடாயில் மசாலா பொருட்களை ஒரு ஓரமாக தள்ளி வைத்து பின் கடாயின் ஓரத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி முட்டைக்கு தேவையான மிளகுத்தூள் மற்றும் உப்பு தூவிவிட்டு முட்டையை சிறிது நேரம் வேக விடுங்கள்.
- பின் முட்டை பாதியளவு வெந்தவுடன் முட்டை உடைத்து விட்டு தக்காளியுடன் சேர்த்து கிளறி விடுங்கள் பின் இதற்கு தேவையான அளவு சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொள்ளுங்கள். பின்பு சிறிது கொத்தமல்லி தூவி விட்டு ஒரு முறை கிளறி விடவும். அவ்வளவு தான் சுவையான முட்டை மசாலா சாதம் தயாராகிவிட்டது.