- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 2
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நச்சத்திர ஹோட்டல்களில் பன்னாட்டு உணவுகளை ருசித்திருந்தாலும்கூட, நம் கிராமிய உணவுகளின் சுவையே நம்மில் பலரையும் ஈர்க்கும்.
கிராமிய உணவுகளில் இடம்பெறும் ஒவ்வோர் உணவுக்கும் கதை உண்டு. தனி சுவையும் உண்டு அந்த மண்ணுக்குரிய மகத்துவமும் உண்டு அத்தகைய அருமையான உணவுகளின் ஒன்றான எள்ளு சாதம் வீட்டில் ஒருமுறை செய்து பாருங்கள் சாப்பிடுவதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : பாரம்பரிய தமிழரின் வல்லாரைக் கீரை துவையல் செய்வது எப்படி ?
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மதிய உணவாக செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த எள்ளு சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நிகழும் ட்ரை பண்ணி பாருங்கள்.
Ingredients
Method
முதலில் சாதத்தை உதிர் உதிராக வடித்தெடுத்து ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு நன்றாக ஆறவிடவும்.
பிறகு வாணலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து அதனுடன் எள் சேர்த்து வெடித்ததும் இறக்கி ஆறவைத்துப் பொடித்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலில் எண்ணைய் விட்டு கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு, போட்டு சிவந்ததும், காய்ந்தமிளகாயை தேவைக்கேற்ப கிள்ளி போடவும்.
இதனுடன் கருவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளரி விட்டு வதக்கி கொள்ளவும்.
பின் உதிராக வைத்துள்ள சாதத்தையும் போட்டு தீயை குறைவாக வைத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள எள் பொடியை சேர்த்து கலந்து, சாதம் நன்கு சூடேறியதும் இறக்கி பரிமாறவும்.






