Advertisement
சைவம்

நாவிற்கு ருசியான வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

நாம் வழக்கம் போல் புளிகுழம்பு, சாம்பார், சிக்கன், மட்டன், போன்ற குழம்பு வகைகளை தான் மாற்றி மாற்றி ஒரு சுழற்சி முறையில் தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி பல குழம்பு வகைகள் உள்ளது இது நமக்கு தெரியும். ஆனால் இங்கு பலருக்கும் அது எப்படி தயார் செய்வது என்று தெரியாது. ஆகையால் நாம் புது விதமாக ஒரு குழம்பு ஒன்று பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதனால் இன்று வேர்கடலை குழம்பு செய்யப் போகிறோம்.

இதையும் படியுங்கள் : மணமணக்கும் சுவையான கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் வேர்க்கடலையை பயன்படுத்தி இந்த குழம்பை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இன்று இந்த வேர்க்கடலை குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வேர்கடலை குழம்பு | Verkadalai Kulambu Recipe in Tamil

Print Recipe
பல குழம்பு வகைகள் உள்ளது இது நமக்கு தெரியும். ஆனால் இங்கு பலருக்கும் அது எப்படி தயார் செய்வது என்று தெரியாது. ஆகையால் நாம் புது விதமாக ஒரு குழம்பு ஒன்று பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதனால் இன்று வேர்கடலை குழம்பு செய்யப் போகிறோம். நீங்கள் வேர்க்கடலையை பயன்படுத்தி இந்த குழம்பை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இன்று இந்த வேர்க்கடலை குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kulambu, குழம்பு
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 5 People
Calories 567

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 2 பவுள்

Ingredients

குக்கரில் வேக வைக்க

  • 150 கிராம் வேர்கடலை
  • 1 ½ கப் தண்ணீர்
  • உப்பு சிறிதளவு

அரைக்க

  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • ½ tbsp மிளகு
  • ½ tbsp சீரகம்
  • ½ tbsp சோம்பு
  • உப்பு சிறிதளவு

குழம்புக்கு

  • வேக வைத்த வேர் கடலை
  • 3 tbsp எண்ணெய்
  • ¼ tbsp கடுகு
  • ½ tbsp சோம்பு
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • 2 tbsp மல்லி தூள்
  • 1 ½ tbsp மிளகாய் தூள்
  • 1 தக்காளி நறுக்கியது
  • ½ கப் தண்ணீர்
  • தேங்காய் அரைத்தது
  • கொத்த மல்லி சிறிது
  • உப்பு தேவையான அளவு
    Advertisement

Instructions

  • முதலில் நாம் எடுத்துக் கொண்ட வேர்க்கடலையை ஒரு கடாயில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பின்பு நாம் வறுத்த வேர்க்கடலையின் தோல்களை நீக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நாம் தோல் நீக்கிய வேர்கடலையே சேர்த்து சிறிது அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு குழம்புக்கு தேவையான தேங்காய் அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய்,
    Advertisement
    பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள், அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • பின் இதனுடன் கடுகு, சோம்பு, பொடியாக நறுக்கி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் கருவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி பின் இதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள், அதன் பின் அரை கப் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் வதக்கி கொள்ளுங்கள். பின் இரண்டு நிமிடம் கழித்து என்னையும் தக்காளியும் தனியாக பிரிந்து வந்ததும் நாம் நான் அரைத்து வைத்த தேங்காய்வையும் இதனுடன் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
  • பின்பு குக்கரில் வேகவைத்த வேர்க்கடலையை வேக வைத்த அந்த தண்ணீருடன் கடாயில் சேர்த்துக் கொள்ளவும். பின் உப்பு சரி பார்த்துக் கொண்டு கடாயை மூடி வைத்து பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும் . பின் கடாய் இறக்கும் பொழுது சிறிதளவு மல்லி இலை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான வேர்கடலை குழம்பு தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 5people | Calories: 567kcal | Carbohydrates: 16g | Protein: 26g | Fat: 49g | Sodium: 18mg | Potassium: 705mg | Fiber: 9g | Sugar: 4g

English Overview : verkadalai kulambu is one of the most important dishes in south india. verkadalai kulambu recipe or verkadalai kulambu seivathu eppadi or verkadalai recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

3 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

14 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

16 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago