- Prep
- 20 min
- Cook
- 30 min
- Total
- 50 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நாம் வழக்கம் போல் புளிகுழம்பு, சாம்பார், சிக்கன், மட்டன், போன்ற குழம்பு வகைகளை தான் மாற்றி மாற்றி ஒரு சுழற்சி முறையில் தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி பல குழம்பு வகைகள் உள்ளது இது நமக்கு தெரியும். ஆனால் இங்கு பலருக்கும் அது எப்படி தயார் செய்வது என்று தெரியாது. ஆகையால் நாம் புது விதமாக ஒரு குழம்பு ஒன்று பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதனால் இன்று வேர்கடலை குழம்பு செய்யப் போகிறோம்.
இதையும் படியுங்கள் : மணமணக்கும் சுவையான கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி ?
நீங்கள் வேர்க்கடலையை பயன்படுத்தி இந்த குழம்பை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இன்று இந்த வேர்க்கடலை குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview : verkadalai kulambu is one of the most important dishes in south india. verkadalai kulambu recipe or verkadalai kulambu seivathu eppadi or verkadalai recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.
Ingredients
Method
முதலில் நாம் எடுத்துக் கொண்ட வேர்க்கடலையை ஒரு கடாயில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பின்பு நாம் வறுத்த வேர்க்கடலையின் தோல்களை நீக்கி கொள்ளுங்கள்.
பின்பு ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நாம் தோல் நீக்கிய வேர்கடலையே சேர்த்து சிறிது அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கி கொள்ளுங்கள்.
அதன் பின்பு குழம்புக்கு தேவையான தேங்காய் அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள், அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
பின் இதனுடன் கடுகு, சோம்பு, பொடியாக நறுக்கி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் கருவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி பின் இதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள், அதன் பின் அரை கப் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் வதக்கி கொள்ளுங்கள். பின் இரண்டு நிமிடம் கழித்து என்னையும் தக்காளியும் தனியாக பிரிந்து வந்ததும் நாம் நான் அரைத்து வைத்த தேங்காய்வையும் இதனுடன் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின்பு குக்கரில் வேகவைத்த வேர்க்கடலையை வேக வைத்த அந்த தண்ணீருடன் கடாயில் சேர்த்துக் கொள்ளவும். பின் உப்பு சரி பார்த்துக் கொண்டு கடாயை மூடி வைத்து பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும் . பின் கடாய் இறக்கும் பொழுது சிறிதளவு மல்லி இலை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான வேர்கடலை குழம்பு தயாராகிவிட்டது.






