மதிய உணவிற்கு ஆரோக்கியமான வேர்க்கடலை பொடி சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில்

By Prem Kumar · 25/10/2025

பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான வேர்க்கடலை பொடி சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். வேர்க்கடலை அனைவரும் விரும்பும் சிற்றுண்டிகளில் ஒன்றாகும். இதை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். வேர்க்கடலையை, வறுத்தோ, பச்சையாகவோ, அவித்தோ சாப்பிடலாம்.

வேர்க்கடலை உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது ஏழைகளின் பாதாம் என்று கூறப்படுகிறது. நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைக்கும் தன்மை வேர்கடலைக்கு உள்ளது. வேர்க்கடலையில் வைட்டமின் E, ஃபோலேட், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உடலுக்கு ஆற்றலை அளிப்பதுடன் தசைகளுக்கு வலிமையைச் சேர்க்கிறது. இப்படி பல நன்மைகளை தன்னுள் தக்கவைத்துள்ள வேர்கடலையை வைத்து வேர்க்கடலை பொடி சாதம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் 15 நிமிடங்களில் ஒரு சூப்பரான சாதம் ரெடி ஆகிடும் அதுவும் சுவையாக இருக்கும். பொதுவாக குழந்தைகள் மதிய உணவிற்கு தயிர் சாதம், லெமன் சாதம், புளி குழம்பு சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸூக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்து விடுங்கள் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி. இப்போது சுவையான வேர்க்கடலை பொடி சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : பூரிக்கு இந்த வேர்க்கடலை கறி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full