Advertisement
சைவம்

ருசியான கேரளா கோதுமை மாவு அப்பம் வீட்டிலயே இப்படி செய்து பாருங்க பக்காவான ஈவினிங் ஸ்நாக்ஸ்!

Advertisement

எல்லாருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான் இந்த கோதுமை மாவு. எல்லோருடைய வீட்டிலும் எப்பொழுதும் மைதா மாவில் இருக்காது ஆனால் கோதுமை மாவு கண்டிப்பாக இருக்கும் காரணம் என்னவென்றால் நம் வீட்டில் எல்லாம் இட்லி தோசை செய்வது போல் அடிக்கடி சப்பாத்தியும் பூரியும் செய்வோம் அதனால் கோதுமை மாவு எப்பொழுதுமே நம் வீட்டில் இருக்கும். நமக்கு எப்போதாவது ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து பல வகையான ஸ்னாக்ஸ் செய்யலாம்.

 கோதுமையை வைத்து கோதுமை போண்டா கோதுமை கலகலா கோதுமை மாவு ரோல் என பலவகையான ரெசிபி செய்யலாம் அந்த வகையில் இன்று நாம் கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய ஒரு இனிப்பு அப்பம் தான் பார்க்கப் போகிறோம். நம் வீட்டில் உள்ள இந்த கோதுமை மாவை வைத்தே நம்மால் சுலபமாக இந்த கோதுமை மாவு அப்பத்தை செய்ய முடியும். சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

Advertisement

பொதுவாக குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த கோதுமை மாவை இனிப்பு ஆப்பத்தை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து கொடுப்பதால் அவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷங்கள் வந்தாலும் அல்லது விருந்தாளிகள் வந்தாலும் இந்த கோதுமை மாவு அப்பத்தை செய்தால் விருந்தாளிகளுக்கு மிகவும் கொடுக்கும் கடவுளுக்கும் கூட நெய்வேதியமாக இந்த அப்பத்தை நாம் படைக்கலாம் மிக மிக சிறப்பானதாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கோதுமை மாவு அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கோதுமை மாவு அப்பம் | Wheat Flour Appam Recipe In Tamil

Print Recipe
 கோதுமையை வைத்து கோதுமை போண்டா கோதுமை கலகலா கோதுமை மாவு ரோல் என பலவகையான ரெசிபிசெய்யலாம் அந்த
Advertisement
வகையில் இன்று நாம் கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய ஒரு இனிப்பு அப்பம் தான் பார்க்கப் போகிறோம். நம் வீட்டில் உள்ள இந்த கோதுமை மாவை வைத்தே நம்மால் சுலபமாக இந்த கோதுமை மாவு அப்பத்தை செய்ய முடியும். சுவையும் அட்டகாசமாக இருக்கும். கோதுமை மாவு அப்பத்தை செய்தால் விருந்தாளிகளுக்கு மிகவும் கொடுக்கும் கடவுளுக்கும் கூட நெய்வேதியமாக இந்த அப்பத்தை நாம் படைக்கலாம் மிக மிக சிறப்பானதாக இருக்கும்.
Course
Advertisement
snacks
Cuisine tamil nadu
Keyword Wheat Appam
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 55

Equipment

  • 1 குழிபணியார கல்

Ingredients

  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கப் வெல்லம்
  • 1/4 டீஸ்பூன் சமையல்சோடா
  • 2 ஏலக்காய்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 முட்டை
  • 1 வாழைப்பழம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  •  
    முதலில் முட்டையையும் ஒரு வாழைப்பழத்தையும் இரண்டு ஏலக்காய் களையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு அரைத்த முட்டை வாழைப்பழம் விழுதை சேர்த்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள வெள்ளத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கரைத்து காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அந்த கோதுமை மாவில் இந்த வெல்லக் கரைசலையும் சேர்த்த தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியான பதத்திற்கு கரைத்த பிறகு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டியில் இந்த கரைசலை எடுத்து போட்டு நன்றாக பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fat: 0.33g | Fiber: 3g | Calcium: 21mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார் இப்படி செய்து கொடுக்க இனி வீட்ல முள்ளங்கி சாம்பார் இப்படி செஞ்சி!

Advertisement
Prem Kumar

Recent Posts

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

10 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

1 நாள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago