ருசியான கேரளா கோதுமை மாவு அப்பம் வீட்டிலயே இப்படி செய்து பாருங்க பக்காவான ஈவினிங் ஸ்நாக்ஸ்!

- Advertisement -

எல்லாருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான் இந்த கோதுமை மாவு. எல்லோருடைய வீட்டிலும் எப்பொழுதும் மைதா மாவில் இருக்காது ஆனால் கோதுமை மாவு கண்டிப்பாக இருக்கும் காரணம் என்னவென்றால் நம் வீட்டில் எல்லாம் இட்லி தோசை செய்வது போல் அடிக்கடி சப்பாத்தியும் பூரியும் செய்வோம் அதனால் கோதுமை மாவு எப்பொழுதுமே நம் வீட்டில் இருக்கும். நமக்கு எப்போதாவது ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து பல வகையான ஸ்னாக்ஸ் செய்யலாம்.

-விளம்பரம்-

 கோதுமையை வைத்து கோதுமை போண்டா கோதுமை கலகலா கோதுமை மாவு ரோல் என பலவகையான ரெசிபி செய்யலாம் அந்த வகையில் இன்று நாம் கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய ஒரு இனிப்பு அப்பம் தான் பார்க்கப் போகிறோம். நம் வீட்டில் உள்ள இந்த கோதுமை மாவை வைத்தே நம்மால் சுலபமாக இந்த கோதுமை மாவு அப்பத்தை செய்ய முடியும். சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

பொதுவாக குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த கோதுமை மாவை இனிப்பு ஆப்பத்தை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து கொடுப்பதால் அவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷங்கள் வந்தாலும் அல்லது விருந்தாளிகள் வந்தாலும் இந்த கோதுமை மாவு அப்பத்தை செய்தால் விருந்தாளிகளுக்கு மிகவும் கொடுக்கும் கடவுளுக்கும் கூட நெய்வேதியமாக இந்த அப்பத்தை நாம் படைக்கலாம் மிக மிக சிறப்பானதாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கோதுமை மாவு அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
4 from 2 votes

கோதுமை மாவு அப்பம் | Wheat Flour Appam Recipe In Tamil

 கோதுமையை வைத்து கோதுமை போண்டா கோதுமை கலகலா கோதுமை மாவு ரோல் என பலவகையான ரெசிபிசெய்யலாம் அந்த வகையில் இன்று நாம் கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய ஒரு இனிப்பு அப்பம் தான் பார்க்கப் போகிறோம். நம் வீட்டில் உள்ள இந்த கோதுமை மாவை வைத்தே நம்மால் சுலபமாக இந்த கோதுமை மாவு அப்பத்தை செய்ய முடியும். சுவையும் அட்டகாசமாக இருக்கும். கோதுமை மாவு அப்பத்தை செய்தால் விருந்தாளிகளுக்கு மிகவும் கொடுக்கும் கடவுளுக்கும் கூட நெய்வேதியமாக இந்த அப்பத்தை நாம் படைக்கலாம் மிக மிக சிறப்பானதாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Wheat Appam
Yield: 4
Calories: 55kcal

Equipment

  • 1 குழிபணியார கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கப் வெல்லம்
  • 1/4 டீஸ்பூன் சமையல்சோடா
  • 2 ஏலக்காய்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 முட்டை
  • 1 வாழைப்பழம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  
    முதலில் முட்டையையும் ஒரு வாழைப்பழத்தையும் இரண்டு ஏலக்காய் களையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு அரைத்த முட்டை வாழைப்பழம் விழுதை சேர்த்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள வெள்ளத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கரைத்து காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அந்த கோதுமை மாவில் இந்த வெல்லக் கரைசலையும் சேர்த்த தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியான பதத்திற்கு கரைத்த பிறகு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டியில் இந்த கரைசலை எடுத்து போட்டு நன்றாக பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fat: 0.33g | Fiber: 3g | Calcium: 21mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார் இப்படி செய்து கொடுக்க இனி வீட்ல முள்ளங்கி சாம்பார் இப்படி செஞ்சி!