புரட்டாசி மாத சனிக்கிழமையில் செய்ய வேண்டிய வழிபாடு!
பொதுவாக புரட்டாசி மாதம் வந்து விட்டாலே பெருமாளுக்கு விரதம் இருந்து அசைவத்தை தவிர்த்து பெருமாளே கதி என்று பக்தர்கள் இறைவனை சரண் அடைவார்கள். அதிலும் இந்த மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் சிறப்பானது சனிக்கிழமைகளில் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதை பற்றியும் சனிக்கி
பொதுவாக புரட்டாசி மாதம் வந்து விட்டாலே பெருமாளுக்கு விரதம் இருந்து அசைவத்தை தவிர்த்து பெருமாளே கதி என்று பக்தர்கள் இறைவனை சரண் அடைவார்கள். அதிலும் இந்த மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் சிறப்பானது சனிக்கிழமைகளில் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதை பற்றியும் சனிக்கிழமையில் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இறை வழிபாடு
அனைத்து கடவுள்களுமே நாம் இந்த விஷயத்தை செய்யும்போது நம் முன்பு காட்சி தருவார்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதை விட இந்த உலகில் வேறு எதுவும் பெரிது கிடையாது இறைவன் நம் வேண்டுதல்களுக்கு செவி கொடுக்க வேண்டும் என்றால் நாம் முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
மண் உருண்டைகளாக மாறிய பூக்கள்
மிகப்பெரிய செல்வந்தர் ஆக இருக்கக்கூடிய ஒருவர் அளவு கடந்த பக்தியினால் பெருமாளுக்கு தங்க பொருட்கள் வெள்ளி பொருட்கள் விலகி உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் கொண்டு அலங்காரம் செய்து பெருமாளுக்கு பட்டாடை அணிவித்து மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்து தினமும் அர்ச்சனை செய்து வந்தார். புரட்டாசி மாதம் தொடங்கியதுமே தினமும் குளித்து முடித்து பெருமாள் முன்பாக உட்காந்து அர்ச்சனை செய்வார் முதல் நாள் அர்ச்சனை செய்யும் போது அர்ச்சனை பூக்கள் இறைவனடி சேரும் போது மண் உருண்டைகளாக மாறிப்போனது. இவரும் ஒரே குழப்பத்தில் பிரம்மை பிடித்தது போல பூக்கள் எப்படி மண்ணு உருண்டைகளாக மாறியது என நினைத்துக் கொண்டே இருந்தார். இதனால் அந்த பணக்காரர் மற்ற வேலைகளில் கவனத்தோடு செயல்பட முடியாமல் வீட்டிற்கு வந்து தூங்கினார். அவர் பெருமாளை நினைத்து எப்படி இது நடந்தது நீ தான் எனக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கூறிவிட்டு தூங்கிவிட்டார். அந்த பணக்காரர் உடைய கனவில் பெருமாள் வந்து “நாளை ராமனை சந்திப்பாயாக” எனக்கூறி மறைந்து விட்டார்.
செல்வந்தர் தேடிய ஏழை விவசாயி ராமர்
செல்வந்தரும் ஒரே குழப்பத்தோடு எப்படியாவது ராமனை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று புறப்பட்டார். அவர் ஒரு ஏழை விவசாயி ஒரு மண் குடிசையில் உட்கார்ந்து மண்ணால் செய்யப்பட்ட பெருமாளை வைத்து தினமும் கோவிந்தா கோவிந்தா என்று அவரை வணங்கி விட்டு வேலைக்கு கிளம்பி விடுவார். அந்த ஏழை ஒரு நாளும் பெருமாளிடம் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. கோவிந்தா கோவிந்தா என்று மட்டும் ஜெபித்துக் கொண்டே இருப்பார் தூய்மையான இந்த அன்பை பணக்காரரும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார்.
ஏழையின் முன் தோன்றிய பெருமாள்
அப்பொழுது அந்த ஏழு விவசாயின் முன்பு பெருமாள் தோன்றி அவருக்கு அருள் புரியவே ஏழை விவசாயி மோட்சம் அடைந்தார். எனவே ஆடை ஆபரணங்கள் விலை உயர்ந்த பொருட்களை வைத்து பெருமாளை வழிபட்டாலும் சுயநலத்தோடு வழிபட்டாலும் எதுவும் கிடைக்காது உண்மையான பக்தியோடு பெருமாளை நாம் வழிபட்டாலே நமக்கு தேவையானவற்றை பெருமாள் கொடுப்பார். புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் அந்த ஏழைக்கு மோட்சம் கிடைத்தது எனவே இறைவனின் நாமத்தை மட்டும் உண்மையான பக்தியோடு தூய்மையான பக்தியோடு கூறுங்கள் உங்களுடைய உண்மையான பக்திக்கு நிச்சயமாக பெருமாள் செவி சாய்த்து உங்களை காக்க ஓடோடி வருவார்.
இதனையும் படியுங்கள் : வேண்டுதல்களை நிறைவேற்றும் பெருமாள் வழிபாடு!