இன்னும் சில நாட்களில் மிதுனத்தில் நேரடியாக பயணிக்க இருக்கும் குரு பகவான் இனி இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!

ஜோதிடத்தில் குரு பகவான் சக்தி வாய்ந்த கிரகமாவார். தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் உள்ள குரு, மார்ச் முதல் நேர்கதியில் பயணிக்க உள்ளார். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு முக்கிய திருப்புமுனையாக அமையவுள்ளது. இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம்,

By ·

ஜோதிடத்தில் குரு பகவான் சக்தி வாய்ந்த கிரகமாவார். தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் உள்ள குரு, மார்ச் முதல் நேர்கதியில் பயணிக்க உள்ளார். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு முக்கிய திருப்புமுனையாக அமையவுள்ளது.  இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான், ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகத்தை கொடுப்பார். தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் உள்ள குரு, மார்ச் 11, 2026 அன்று, குரு மிதுனத்தில் நேரடியாக பயணிக்கத் தொடங்குவார். குருவின் நேரடி இயக்கத்தின் விளைவு 12 ராசிகளையும் பாதிக்கும். குருவின் நேரடி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த ராசிக்காரர்கள் அந்த பயனை அடையப் போகிறார்கள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம். 

ரிஷபம் 

ரிஷப ராசிக்காரர்களுக்கு, நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினருடனான உங்கள் உறவுகள் வலுப்பெறும். காதல் வாழ்க்கையில் காணப்பட்ட மனஸ்தாபங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். வீடு, வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டைகள் மறைந்து ஒற்றுமை பிறக்கும்.

சிம்மம் 

குருவின் வக்ர பெயற்சியால் சிம்ம ராசிக்காரர்கள் பெரிதும் பயனடையலாம். இந்த நேரத்தில் தொழிலதிபர்கள் லாபம் பார்க்கலாம். நிதி நிலைமையை வலுப்படுத்தும். திருமண தடை காரணமாக வரன் கிடைக்காமல் காத்திருந்த நபர்களுக்கு விரைவில் நல்ல வரன் கிடக்கும். அரசு வேலை எதிர்பார்த்து காத்திருந்த நபர்களுக்கு அவர்களின் விருப்பம் போல் அரசு வேலை கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் பல மேற்கொள்ள வேண்டி இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள்.

மீனம் 

மீன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். செல்வம் அதிகரிக்கும், தொழிலில் வெற்றியைக் காண்பீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணமும் முடியும். போட்டி தேர்வு, திறனாய்வு தேர்வுகளை எழுதி வரும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் மற்றும் வெற்றிகளும் கிடைக்கும். குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : 2026ம் ஆண்டு மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம் இனி இந்த மூன்று ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!

Recipes AMP · Quick view
View full