ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் கிரகங்கள் இடம் மாறும் பொழுது ஒரு சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது சில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் வருகிற ஜனவரி 2, 2026 அன்று, குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழப்போகிறது. இதனால் கஜகேசரி யோகம் உருவாக்கப் போகிறது. ஜோதிடர்கள் இந்த மங்களகரமான சேர்க்கையை மூன்று ராசிக்காரர்களுக்கு சிறந்த பலன்களை தரும் என்று கூறுகின்றனர். இந்த ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டிலும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் இந்த கஜகேசரி யோகம் எந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
ரிஷபம்

ஆண்டின் தொடக்கத்தில் கஜகேசரி யோகம் உருவாகுவது, ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் தொடர்ந்து கிடைக்கும். இந்த சுப யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். நிதி ரீதியாக வலுவடைவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். மரியாதை மற்றும் வருமானம் இரண்டும் அதிகரிக்கும். தடைபட்டிருந்த பண வரவு கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்ய உகந்த நேரம் ஆகும். உங்கள் திறமை பாராட்டப்படும். அரசு உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு பண உதவி அல்லது கடன் உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்

கஜகேசரி யோகம் மிதுன ராசியில் உருவாகிறது, எனவே இந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக வலுவான நிலையை அடைவீர்கள். நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். வீட்டில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலதிபர்களுக்கு லாபத்திற்கான வழிகள் திறக்கப்படும். வேலையில்லாமல் தவித்து வருபவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். இந்த நேரம் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தால் நிறைந்திருக்கும். சமூகத்தில் உங்கள் கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும்.
துலாம்

ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி யோகம், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். உங்கள் அதிர்ஷ்டம் மேலும் வலுப்பெறும். இந்த நல்ல யோகம் உங்கள் வாழ்க்கையில் சில நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். உங்கள் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். வருமானத்தில் தொடர்ச்சியான முன்னேற்றம் சாத்தியமாகும். குடும்ப வாழ்க்கையில் அன்பும் நல்லிணக்கமும் நிலவும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
இதனையும் படியுங்கள் : 2026ல் தன் பாதையை மாற்றும் ராகு, கேது இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை தான்!!


