மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம் இந்த ராசிகளுக்கு அடுத்த 54 மணி நேரத்திற்கு அனைத்திலும் வெற்றி தான்!!
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் கிரகங்கள் இடம் மாறும் பொழுது ஒரு சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போ
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் கிரகங்கள் இடம் மாறும் பொழுது ஒரு சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது சில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் குரு டிசம்பர் 5 ஆம் தேதி பிற்பகல் 3:38 மணிக்கு வக்ர இயக்கத்தில் மிதுன ராசிக்குள் நுழைவார். அதே நாளில், இரவு 10:15 மணிக்கு சந்திரனும் மிதுன ராசிக்குள் நுழைவார். இதனால் குரு சந்திரன் சேர்க்கை உருவாகும், இதனால் கஜகேசரி ராஜ யோகம் ஏற்படும். இது 3 ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகளைத் தரும். யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் லக்ன வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை கஜகேசரி யோகாத்தை உருவாக்குகிறது, இது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த யோகம் மிதுன ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை, ஆளுமை மற்றும் முடிவெடுப்பதை வலுப்படுத்தும், இதனால் உங்கள் இலக்குகளை அடைய முடியும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் உங்களுக்கு மன அமைதியை கொடுக்கும். சுயமாக தொழில் தொடங்க விரும்பும் நபர்களுக்கும் சாதகமான ஒரு காலம். வியாபாரத்தில் போதுமான வருமானம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
துலாம்
கஜகேசரி ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த வக்ர யோகம் இந்த ராசியின் பத்தாவது வீட்டில் உருவாகிறது. புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. துலாம் ராசிக்காரர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். புதிய திட்டத்தைத் தொடங்குவது பற்றி யோசிப்பவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். மூத்த அதிகாரிகளின் ஆதரவுடன் பெரிய பணிகளை எடுத்துச் செய்வீர்கள். உங்கள் தந்தை மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு பெறுவீர்கள். பணம் கொடுத்த இடத்தில் இருந்து கேட்காமலேயே திரும்ப கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம் மிகவும் நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் அல்லது புதிய பொறுப்புகள் பெறலாம். இந்த காலகட்டத்தில் முதலீடுகள் மூலம் நிதி ஆதாயங்களைப் பெறலாம். ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் கொள்ளலாம். வாழ்க்கையில் நீண்டகால ஏற்ற தாழ்வுகளும் நன்மை பயக்கும். அரசு ஒப்பந்தங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் சாதகாக முடியும். குழந்தைகள் வழியே ஒரு நற்செய்தி கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீடு – வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டு.
இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான், உங்கள் ராசிக்கான பலன் இதோ!!