நவம்பர் மாதத்தில் வக்ர பெயர்ச்சியாகும் குரு பகவான் இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!
வேத ஜோதிடத்தில் குரு பகவான் செழிப்பு, புகழ், ஆன்மீகம், நல்லொழுக்கம், செல்வம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்போது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது. குருபகவான் இந்த ஆண்டின் இறுதியில் மிதுன ராசியில் இருந்து வக்கிர
வேத ஜோதிடத்தில் குரு பகவான் செழிப்பு, புகழ், ஆன்மீகம், நல்லொழுக்கம், செல்வம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்போது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது. குருபகவான் இந்த ஆண்டின் இறுதியில் மிதுன ராசியில் இருந்து வக்கிர நிலையில் நகர இருக்கிறார். அதாவது செவ்வாய்க்கிழமை, நவம்பர் 11, 2025 அன்று, இரவு 10:11 மணிக்கு, அறிவின் கிரகமான குரு கடகத்தில் வக்ர நிலையில் பயணிக்கப்போகிறது. சந்திரனின் ராசியான கடகம், குருவின் உச்ச ராசியாகும். குரு தற்போது புதனின் ராசியான மிதுனத்தில் பயணித்து வருகிறார், மேலும் அக்டோபர் 18, 2025 அன்று, அந்தக் கிரகம் தனது ராசியை மாற்றி அதிசார நிலையில் கடகத்திற்குச் செல்லும். இதனால் நான்கு ராசிகளுக்கு அதிர்ஷ்டம், சிறப்பு பலன் கிடைக்கும். அந்த வகையில் யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, குருவின் வக்ரப் பயணம் நல்ல பலன்களைத் தரும். திடீர் பண லாபம் நிதி விஷயங்களில் நிம்மதியைத் தரும். முதலீடுகள் லாபத்தைத் தரக்கூடும். பழைய கடன்கள் திருப்பிச் செலுத்தப்படலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். செல்வாக்கு மிக்க ஒருவரின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, இணக்கம் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு, குருவின் வக்ரப் பயணம் பல வழிகளில் சிறப்பாக இருக்கும். குடும்பம் தொடர்பான பணிகள் வெற்றி பெறும். பழைய பிரச்சினைகள் தீர்க்கப்படும். பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகள் திறக்கப்படலாம். நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் கைகூடும். தந்தை வழியில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் மற்றும் தொழில் ரீதியான பயணம் போன்றவை வெற்றி அடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ரப் பயணம் பல நன்மைகளைத் தரும். குடும்ப உறவுகள் ஆழமடையும். இளைய உடன்பிறப்புகள் உதவி செய்வார்கள். எழுதுதல், படிப்பு அல்லது பயணம் போன்ற அறிவு தொடர்பான தலைப்புகள் மூலம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும்.
மீனம்
குருவின் மாறிவரும் இயக்கங்கள் மீன ராசிக்காரர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நட்பு உணர்வு அதிகரிக்கும், மேலும் சமூக ரீதியாக மதிப்பு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய இலக்குகளை அடைவதற்கான முயற்சிகள் பலனளிக்கக்கூடும். பிரச்சனைகள் அனைத்தும் விலகுவதால் மனம் அமைதி அடையும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சிக்கல்கள் தீரும்.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்கான சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!!