மார்ச் மாதத்தில் உருவாகும் கால சர்ப்ப யோகத்தால் பலன் பெறும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!
ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய மாற்றங்கள் நிகழ்த்தும் பொழுது தான் நாம் அதனை சரியாகப் புரிந்து கணித்து சொல்ல முடிகிறது. அந்த வகையில் 2026 மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதம் ராகு பகவான் மகா பாக்ய ராசியான க
ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய மாற்றங்கள் நிகழ்த்தும் பொழுது தான் நாம் அதனை சரியாகப் புரிந்து கணித்து சொல்ல முடிகிறது. அந்த வகையில் 2026 மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதம் ராகு பகவான் மகா பாக்ய ராசியான கும்பத்திலும், கேது சிம்மத்திலும் பெயர்ச்சி அடைவார்கள் இந்த காலகட்டத்தில் மற்ற அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேதுவின் அச்சிற்குள் வரும் பொழுது கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோகம் உருவாகிறது.இந்த கிரகங்களின் நிலைகளால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது ராகு கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
கால சர்ப்ப யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். தொழில் வெளிநாடு தொடர்புடைய வணிகம் கையெழுத்தாகும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
ராகு – கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது. இந்த காலகட்டத்தில் நினைத்த இலக்கை அடைய முடியும். தொழிலில் சில சாதனைகளைப் புரியலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உயர் கல்வி படிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
கால சர்ப்ப யோகத்தால் மீன ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை அனுபவிக்க இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் வெற்றிகளை குவிக்க முடியும். கல்வி துறையில் இருப்பவர்களால் சாதிக்க முடியும். வெளிநாட்டில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். சொத்து தொடர்பான விஷங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சி பலன்கள் 2026!!