அனுஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் வெற்றி தான்!!

நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசிய

By ·

நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் சூரிய பகவான் நவம்பர் 19ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்ற உள்ளார். இந்த நாளில், சூரியன் விசாக ராசியை விட்டு வெளியேறி அனுஷ நட்சத்திற்குள் நுழைகிறார். டிசம்பர் 2ஆம் தேதி அனுஷ நட்சத்திரத்தில் தான் சூரியன் இருப்பார். இதனால் 3 ராசிகளுக்கும் நற்பலன்களை சூரிய பகவன் கொடுக்க இருக்கிறார். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த ஆன்மிகப் பதிவில் காண்போம்.

மிதுனம் 

சூரிய பகவனானின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கொடுக்கும் என ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. சூரிய பகவனானின் நட்சத்திர மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திருமண தடைகள் நீங்கி, கூடிய விரைவில் நல்ல செய்திகள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும்.

துலாம் 

துலாம் ராசியினருக்கு சூரிய பகவானின் நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டம் கொட்டும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். நிதி ரீதியாக இருந்த வந்த பிரச்னைகளுக்கு முடிவடையும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய வழிகள் திறக்கப்படும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

மகரம் 

சூரிய பகவனானின் நட்சத்திர மாற்றத்தால், மகர ராசிக்காரர்களுக்கு செல்வம் கொட்டும். வீட்டில் இருந்த வந்த அனைத்து பிரச்னைகளும் முடிவடையும். மாணவர்கள் நற்பெயரை பெறுவீர்கள். வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் தீரும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான், உங்கள் ராசிக்கான பலன் இதோ!!

Recipes AMP · Quick view
View full