செவ்வாய் பெயர்ச்சியுடன் உருவாகும் யோகத்தால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்த
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நெருப்பு கிரகமாக கருதப்படும் செவ்வாய் இன்று செப்டம்பர் 13 துலாம் ராசியில் குடியேறுகிறார். இதனிடையே இன்று சனி பகவான் செவ்வாயுடன் இணைந்து ஷடாஷ்டக் யோகத்தை உருவாக்குகிறார். காற்று ராசியான துலாம் ராசியில் குடியேறும் இந்த சிவப்பு கிரகம், மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்கும் தனித்துவமான பலன்களை அளிக்கிறார். அனைத்து ராசிகளும் நல்ல பலன்களை பெற்றாலும் மேஷம், கடகம் உள்ளிட்ட 5 ராசிக்கு நற்பலன்களை கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது. யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினரின் ஆற்றல் நிலையை அதிகரிக்கும் ஒரு கிரக நிலை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. இன்று உண்டாகும் இந்த மாற்றம், உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உங்கள் தனித்திறமைகள் வெளிப்படும். புதிய பணி எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களுக்கும் இன்று ஒரு நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் நீங்கி முன்னேற்றத்திற்கு வழி உண்டாகும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு மன அமைதியை உண்டாக்கும் ஒரு தினமாக இன்று பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் இதுநாள் வரையில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் உறவில் காணப்பட்ட மனஸ்தாபங்கள் மறையும். புதிய வாகனம், வீடு வாங்கும் யோகமும் இன்று காணப்படுகிறது. குடும்ப உறவுகளுடன் இணக்கமான இருங்கள். குடும்ப வாழ்க்கையில் உங்கள் துணையுடன் உண்டான மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு மங்களகரமான ஒரு தினமாக இன்று இருக்கும். புதிய விஷயங்கள் பல தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்கள் எண்ணத்தில் இருந்த தொழிலை இன்று தொடங்குவீர்கள். நெருங்கிய நண்பர்கள் வழியே நல்ல வரன் கிடைக்கும். விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை சிறப்பாக மாறும். குழந்தை பாக்கியம் தொடர்பான ஒரு நற்செய்தி கிடைக்கும். கலைத்துறையில் இருக்கும் நபர்கள் தங்கள் திறன்களை வளர்த்து கொள்வார்கள். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
கடகம்
கடக ராசியினரின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் நற்பலன் அளிக்கும் ஒரு தினமாக இன்று இருக்கும். குறிப்பாக, நாள்பட்ட நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நபர்கள் தங்கள் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள், உங்கள் பெயரை நிலைநாட்டுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் உங்கள் பெற்றோர் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்து வழியே புதிய வருமானத்தை உண்டாக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினர் தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி காணும் ஒரு தினமாக இன்று இருக்கும். உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் உண்டான மனஸ்தாபங்களுக்கு முடிவு காண்பீர்கள். நண்பர்களுடன் இன்று போதுமான நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். பணி காரணமாக சில வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு காலமாகவும் இது அமையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்கான சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!!