உத்திர நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சூர்ய பகவான் இனி இந்த ராசிகளுக்கு பணமழை தான்!!

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல் நட்சத்திரத்தையும் மாற்றிக் கொள்வது வழக்கம். நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய

By ·

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல் நட்சத்திரத்தையும் மாற்றிக் கொள்வது வழக்கம். நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் சூர்ய பகவான் தற்போது பூரம் நட்சத்திரத்தில் வீற்றிருக்கிறார். வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சூர்ய பகவான் அவருக்கு உகந்த உத்திரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் அடையப்போகின்றனர். யார் அந்த ராசிகள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

மேஷம்

சூர்ய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தொழில் வெற்றிப் பாதைக்கு திரும்பி முன்னேற்றம் காணும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கடகம்

சூர்ய பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமானதாகும். நம்பிக்கை அதிகரிக்கும் என்பதால், பணியிடத்தில் நீங்கள் பல புதிய பொறுப்புகளை பெறவீர்கள். பழைய முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வழியில் உங்களுக்கு வருமானம் வந்து சேரும். குடும்பத்தினரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சூர்ய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றத்தை கொண்டுவரும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையிடத்தில் உங்களின் சிறப்பான பணியால் நல்ல பெயரும், அதற்கு தகுந்த பாராட்டும் ஊதியமும் கிடைக்கும் திறனை வளர்த்துக்கொள்ளும் நேரம் இது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கொடுக்கப்படும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சமூக வாழ்க்கையில் உங்கள் புகழ் அதிகரிக்கும்.

துலாம்

சூர்ய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் மரியாதையை கொண்டு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும். பணி சார்ந்த விஷயங்கள் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறும். வேலையிடத்தில் உங்களுக்கு வெற்றி நிச்சயம். தங்கள் கடின உழைப்புக்கு பாராட்டுகளைப் பெறலாம். பேச்சில் இனிமை அதிகரிக்கும். அதிகம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்‌. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பெரிது படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிக ஒப்பந்தங்கள் அல்லது பேச்சுவார்த்தைகளில் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்கான சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!!

Recipes AMP · Quick view
View full