தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் பகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் வெற்றி தான்!!
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் செவ்வாய் தைரியம், வீரம், நிலம், வீடு, மனை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர். இவர் அனைத்து கிரகங்களின் சேனாபதியாக உள்ளார். இவர
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் செவ்வாய் தைரியம், வீரம், நிலம், வீடு, மனை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர். இவர் அனைத்து கிரகங்களின் சேனாபதியாக உள்ளார். இவர் டிசம்பர் 7, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:26 மணிக்கு தனுசு ராசியில் பெயர்ச்சி ஆவார். செவ்வாய் பெயர்ச்சி டிசம்பர் மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. செவ்வாயின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகள் இதனால் அதிக நன்மைகளை பெறுவார்கள். அந்த வகையில் யார் அந்த நான்கு அதிர்ஷ்ட ராசிகள் என்பதை இந்த ஆன்மிகப் பதிவில் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும். தொழில் முன்னேற்றம் விரைவாக இருக்கும். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வலுவாக இருக்கும். உங்கள் பணி மற்றும் அதிகார பலம் அதிகரிக்கும். முதலீடுகள் லாபத்தைத் தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் உங்களை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி லாபத்திற்கான பல வழிகளைத் திறக்கும். நீண்டகால எதிரிகள் தோற்கடிக்கப்படலாம். தொழில் வாய்ப்புகள் உயரலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். வெளிநாட்டுப் பயணம் அல்லது வெளிநாடுகள் தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீடுகளிலிருந்து சிறந்த லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமணத்திற்காக காத்திருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியிடத்தில் தலைமைப் பண்புகள் வெளிகாட்டுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். கடின உழைப்பிற்கு தகுந்த பலன்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். இந்த காலத்தில் முக்கிய இலக்குகளை அடைவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். உடல் ஆரோக்கியன் நன்றாக இருக்கும். நீண்ட காலமாகத் தடைபட்ட திட்டங்கள் வேகம் பெறும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க இது ஒரு சரியான நேரம். நிதி நிலை வலுவடையும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மிகவும் இணக்கமாக மாறும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான், உங்கள் ராசிக்கான பலன் இதோ!!