வக்ரம் அடையும் ராகுவினால் இனி இந்த ராசிக்காரர்கள் உச்சத்தை தொட போகிறார்கள்!!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. இவற்றால் சில ராசிகளில் சுப வ
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. இவற்றால் சில ராசிகளில் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும். ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறார். ராகு தன் துணைக்கு ஏற்ப பலன்களைத் தருவதாக கூறப்படுகிறது. அதாவது ராகு சுப கிரகம் அல்லது ராசியில் இருந்தால் நல்ல பலனையும், அசுப கிரகத்துடன் இருந்தால் அசுப பலன்களையும் தரும். தற்போது மீன ராசியிலிருந்து விலகும் ராகு 8 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு மாறுகிறார். கும்பத்தை ஆளும் கிரகம் சனி, கர்ம பலன்களைத் தருபவர். இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்றாலும், சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறவுள்ளனர். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். ராகு பெயர்ச்சியால் மேஷ ராசியினரின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கலாம். பண வரவு அதிகரிக்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். நிலுவையில் இருக்கும் பணிகள் நல்ல முறையில் நடந்து முடியும். திருமணமானவர்களின் வாழ்க்கையின் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ராகுவின் பாக்கியம் கிடைக்கப் போகிறது. செல்வம் பெருக வாய்ப்புகள் உண்டு. மகர ராசியினரின் திடீர் பணவரவு கூடும். மகர ராசியினரின் பேச்சு நடையால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். குழந்தைகள் மூலம் நல்லச் செய்திகள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கும்பம்
ராகு சஞ்சரிப்பது கும்ப ராசிக்காரர்களுக்கு மங்களகரமாக அமையப் போகிறது. கும்ப ராசிக்காரர்கள் எல்லாத் துறைகளிலும் பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால், அதை இந்த நேரத்தில் முடிக்கலாம். ஆதாயத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட காலமாக நீங்கள் திட்டமிட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். பல குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
இதனையும் படியுங்கள் : 2025 புத்தாண்டில் 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!!