30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் நவபஞ்ச யோகம் இனி இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!!
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் இடம் மாறும் பொழுது ஒரு சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் இடம் மாறும் பொழுது ஒரு சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அந்த வகையில் வரும் டிசம்பர் 6-ஆம் நாள் விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் புதன், மீன ராசியில் இருக்கும் சனி பகவானுடன் இணைந்து நவ பஞ்ச யோகத்தை உண்டாக்குகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் உண்டாகும் இந்த அரிய நவபஞ்ச யோகம் சில ராசியினருக்கு செல்வ வரவை கொண்டு வரும். அந்த வகையில் யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம்.
கும்பம்
சனி, புதன் உண்டாக்கும் இந்த விசித்திர நவபஞ்ச ராஜயோகம் ஆனது, உங்களின் தொழில் வாழ்கையில் வளர்ச்சியை கொண்டு வருகிறது. உங்கள் முதலீடுகள் அனைத்தும் எதிர்பார்த்த நற்பலனை கொண்டு வரும். பயணங்கள் பல செய்ய வேண்டி இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையை திருமணம் எனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த சனி – புதன் நவபஞ்ச யோகம், பல்துறை வெற்றிகளை கொண்டு வருகிறது. நிதி விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பணத்தை சேமிக்க போதுமான வழிகளும் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மேம்படும். காதல் உறவுகள் வலுவடையும்.
மீனம்
மீன ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் 9-வது வீட்டில் புதனும், சனி பகவானும் இருக்க, மீன ராசி கொண்டவர்களுக்கு இந்த நவபஞ்ச யோகம் நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்புகளை வழங்குகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அலுலவக பணி மேற்கொண்டு வரும் நபர்கள் பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள். உயர் பதவிகள் மற்றும் ஊக்கத்தொகை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி கொண்டவர்களுக்கு இந்த சனி – புதன் உண்டாக்கும் நவபஞ்ச யோகம் ஆனது, நீண்ட கால பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருகிறது. நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் வழியே போதுமான லாபத்தை சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான், உங்கள் ராசிக்கான பலன் இதோ!!