செவ்வாய் வக்கிர நிவர்த்தியால் பலன் பெறும் ராசிகள்!!

நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். வக்கிர நிலையில் மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் செவ்

By ·

நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். வக்கிர நிலையில் மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் பிப்ரவரி 24ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக சில ராசியை சேர்ந்தவர்களுக்கு காதல் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அதிபதியான செவ்வாய் தைரிய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வேலை, தொழிலில் உள்ள போட்டியில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் மன அமைதி உண்டாகும். சொந்தமாக கடை நடத்துபவர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றமும், போட்டித் தேர்வில் சிறப்பான வெற்றி உண்டாகும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டகால முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு தன ஸ்தானத்தில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களின் செயல்பாடுகளில் நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். நடுத்தர வயதினருக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்டகாலமாக நோயால் துன்பப்பட்டு வந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். உங்கள் வியாபாரம், தொழில் தொடர்பாக லாபம் பெறுவீர்கள். புத்திசாலித்தனமான முடிவுகள் வெற்றியை தரும். உடல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை அடைவீர்கள். தொழில் செய்யபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

உங்கள் ராசிக்கு நீச கிரகமான செவ்வாய், விரய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைவதால், உங்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களைச் சந்திப்பீர்கள். மனதில் தைரியமும், மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்லவும், அதனால் நற்பலனையும் அடைவீர்கள். பொருளாதார சூழ்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். காதலில் இருப்பவர்கள் மற்றும் கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும்.

சிம்மம்

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு பலவிதத்தில் நன்மையும், லாபங்களும் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும். புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாக இருக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றியை பெறலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலம் நல்ல சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்கு சில காலமாக இருந்து வந்த பிரச்சினைகள், கவலைகள் விலகும். உங்கள் வேலை, பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முழு ஆற்றலுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி பெருகும். உங்களுடைய நேரத்தை குடும்பத்துடன் செலவிடுவீர்கள். உங்கள் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சில சவால்களை எதிர்கொண்டாலும், அதை சிறப்பாக சமாளிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதனையும் படியுங்கள் : செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை