சனிப்பெயர்ச்சியால் கஷ்டங்களுக்கு உள்ளாகப் போகும் சில ராசிகள்!
நவம்பர் 15ஆம் தேதி சனி பகவான் வக்ர நிலை அடையப்போவதால் 12 ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையிலும் பெரும் தாக்கம் ஏற்படும். ஆனால் ஒரு ஐந்து ராசிக்காரர்களுக்கு மட்டும் சில கஷ்டங்கள் ஏற்படும் அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம். மேஷ ராசி சனிபகவானின் இந்த பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களு
நவம்பர் 15ஆம் தேதி சனி பகவான் வக்ர நிலை அடையப்போவதால் 12 ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையிலும் பெரும் தாக்கம் ஏற்படும். ஆனால் ஒரு ஐந்து ராசிக்காரர்களுக்கு மட்டும் சில கஷ்டங்கள் ஏற்படும் அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி
சனிபகவானின் இந்த பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய பிரச்சனை ஏற்படும். நிறைய கண் திருஷ்டிகள் ஏற்பட்டு அதனால் வாழ்க்கையில் பல காரிய தடைகள் உருவாகும். நல்ல வேளையில் இருப்பவர்களுக்கு கடுமையான சவால்கள் ஏற்பட்டு வேலை கூட போகும் நிலை ஏற்படலாம். தொழிலை விரிவாக்குவதற்கு நீங்கள் எடுக்கின்ற திட்டமும் முயற்சியும் வீணாக நேரிடும். காதல் வாழ்க்கையிலும் கூட பிரச்சினைகள் அதிகமாகவே ஏற்படும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் பெயர்ச்சியால் கடுமையான தாக்கம் ஏற்படும். வாழ்க்கையில் மிகப்பெரிய மன அழுத்தம். தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து சோதனைகள் நிகழும். யாருடன் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் அமைதியாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனி பகவானின் பெயர்ச்சியால் பணிசுமை அதிகமாக இருக்கும். வரவைவிட செலவு அதிகமாகும். திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் அதிகமான பிரச்சனைகள் நேரும் தொழில் மற்றும் வியாபாரத்திலும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் இந்த வக்கிரநிலையால் கடுமையான பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே அதிகமான பிரச்சனைகள் உருவாகும். பேச்சுவார்த்தையிலேயே பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டால் அந்த பிரச்சினை சுமுகமாக முடிவடையும்
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் பெரும் குழப்பத்தில் இருப்பீர்கள். வெற்றி உங்கள் வசம் இருக்காது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இதனையும் படியுங்கள் : 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் 2027ஆம் ஆண்டு வரை செல்வங்களை குவிக்கப்போவது இந்த மூன்று ராசிகள் தான்!