நடக்கவிருக்கும் செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்!!
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்குகின்றார். அவர் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றக் கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய த
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்குகின்றார். அவர் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றக் கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை 28 ஆம் தேதி கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடக்க உள்ளது. செவ்வாய் கன்னி ராசிக்கு செல்வதால், குஜகேது யோகம் முடிவடையும். ஆனால் செவ்வாய் மற்றும் ராகுவின் நிலையினால் ஷடாஷ்டக யோகம் தொடங்கும். ஷடாஷ்டக யோகம் இயற்கை பேரழிவுகள், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் விபத்து ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கிறது. எனவே கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சாரத்தால் எந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினர் வாகனத்தை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவில் சில விரிசல்களையும் காணலாம். திடீர் இழப்புகள் ஏற்படலாம். திருமண பேச்சு வார்த்தையை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வாக்குவாதம் செய்யாமல் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன் பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். திட்டப்படி வேலை நிறைவேறாமல் அதிக மன அழுத்தத்தை உணரலாம். குடும்பத்துக்காக செலவுகள் மற்றும் சில சிரமங்களை சந்திப்பீர்கள். திடீர் நிதி இழப்பு உண்டாகும் சூழல் காணப்படுகிறது. உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. இந்த நேரத்தில், திருமண வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனைகள் உண்டாகலாம். திருமண வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். பணியிடத்தில் யாருடனும் வாக்குவாதங்கள் அல்லது மோதல்களைத் தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெற்ற பணத்தை திரும்பத் தருவதற்கு சற்று தாமதமாகும். காதல் வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பயணத்தை ஒத்திவைப்பது நல்லது. உங்களுக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் உங்கள் பணிகள் அனைத்தையுமே கொஞ்சம் எச்சரிக்கையுடன் செய்தால் சிக்கல்களை தவிர்க்கலாம். உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில், வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சில விஷயங்கள் உங்களை காயப்படுத்தக்கூடும், ஆனால் பொறுமை மற்றும் புரிதலுடன் இருந்தால், எல்லாம் சரியாகிவிடும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிதாக வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் அதனை சற்று தள்ளி வைப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. எதிரிகள் உங்களை நோக்கி வந்து கொண்டே இருப்பார்கள்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் வெற்றியை பெறப்போகும் சில ராசிகள்!!