சந்திர கிரகணத்தால் அதிர்ஷ்டத்தில் நனைய போகும் சில ராசிக்காரர்கள்!
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணங்கள் அசுபத்தின் அறிகுறிகளாக திகழ் பவை. அதனால் தான் சூரிய கிரகணம் நிகழும் போதும் சந்திரகிரகணம் நிகழும் போதும் எந்த ஒரு சுப காரியங்களும் நடக்காது மேலும் கோவில்களிலும் எந்த பூஜையும் நடக்காது. ஏனெனில் கிரகணங்களின் போது எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்க
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணங்கள் அசுபத்தின் அறிகுறிகளாக திகழ் பவை. அதனால் தான் சூரிய கிரகணம் நிகழும் போதும் சந்திரகிரகணம் நிகழும் போதும் எந்த ஒரு சுப காரியங்களும் நடக்காது மேலும் கோவில்களிலும் எந்த பூஜையும் நடக்காது. ஏனெனில் கிரகணங்களின் போது எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் எனவேதான் அது அசுபமாக கருதப்படுகிறது. இந்த கிரகணங்களால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல வழி நடக்கும் அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஜோதிட நிபுணர்கள் செப்டம்பர் 17 இரவு ஏழு முப்பத்தி நாலு மணிக்கு நிகழந்த முழு சந்திர கிரகணத்தால் ஒரு சில ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்று கூறி இருக்கிறார்கள் அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி
சந்திர கிரகணத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை யாரிடம் ஆவது இழந்து இருந்தால் அதுவும் சீக்கிரத்தில் கைகூடும். வியாபாரத்திலும் நலம் முன்னேற்றம் இருக்கும்.
மிதுன ராசி
இந்த ஆண்டு நிகழப்போகும் சந்திர கிரகணத்தால் மிதுன ராசிக்கு நிறைய சாதகமான பலன்கள் கிடைக்கும். நீதிமன்ற தொடர்பான விஷயங்களில் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைத்து உயர் பதவிகளும் கிடைக்கும். அதேபோல் சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் சாதகமாக அமைவதற்கு வாய்ப்பு நிறைய உள்ளது. உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறி அதன்மூலம் தொழிலிலும் வேலைவாய்ப்பிலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவை பெற்று நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்டம் கிடைத்து அதன் மூலம் சொந்த வீடு வாகனங்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்
தனுசு ராசி
சந்திர கிரகணத்தால் ராகுவும் சந்திரனும் இணைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் கிடைக்கும் மேலும் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் உங்களுடைய வியாபாரம் மேம்படுவதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளது.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நாள் என்று தொடங்கப்படும் திட்டங்கள் வேலைகள் அனைத்தும் நிறைவேறும். அதன் மூலம் வருமானம் பெருகி சேமிப்புகளும் பெருகி பொருளாதார நிலையில் மாற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் நிறைய வளர்ச்சி இருக்கும்.
இதனையும் படியுங்கள் : செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் சூரிய பெயர்ச்சியினால் இந்த ராசிகளுக்கு பிரச்சினைகள் தான்!