செப்டம்பர் 16ம் தேதி சூரியன், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சஞ்சார மாற்றம் செய்கிறார். குரோதி ஆண்டில் சூரியனின் கன்னி ராசி பெயர்ச்சியானது, புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். புரட்டாசி மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்

எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம் இது, வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏயபடும். நிதி ஏற்ற இறக்கங்களும் நேரிடும். வேலையில் பல சவால்களை சாந்திகக்கலா. முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
கும்பம்

தொழிலில் கவனம் வேண்டும். நிதானத்துடன் பேசுவது நல்லது. வரவுகள் அதிகரித்தால், அதற்குகேற்ப செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். வியாபாரத்திலும் நஷ்டம் வரலாம். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை மோசமடையலாம். நீங்கள் நிதி ரீதியாக இழப்பை சந்திப்பீர்கள். எனவே இந்த நேரத்தில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.
மகரம்

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடன் சார்ந்த உதவிகள் செய்ய வேண்டியிருக்கும். பணியிடத்தில் இதுவரை இருந்துவந்த சூழல் மாறும், இது மனதில் புதுவிதமான சிந்தனைகளை உருவாக்கும். திருமண வாழ்க்கையில் சிரமங்கள் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் வேலை மாற்ற செய்வதை தவிர்க்கவும்.
தனுசு

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். கடன் வாங்கலாம். முதலீடு செய்வதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையேயான உறவில் விரிசல் ஏற்படலாம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் உங்களை தேடி வரும். இதனால் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம்.
விருச்சிகம்

ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அனுகூலமாய் இருக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொண்டு அறிவியல் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பேசும் வார்த்தைகளை நிதானத்துடன் பேசவும். குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தாகராறுகள் ஏற்படலாம். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம், கவனமாக இருக்கவும். உங்களின் வேலை அல்லது வியாபாரத்தில் உங்களுக்கு கிடைத்த வெற்றியால் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
துலாம்

உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணம் தொடர்பான முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். புரட்சிகரமான சிந்தனைகள் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திடீரென்று சில நோய்கள் வருவதால் அதிக செலவுகள் ஏற்படும். பிறருடன் வாக்குவாதம் அல்லது தகராறு ஏற்படலாம். முக்கியமாக உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்ய முயலும்போது சிரமங்களை எதிர்கொள்வீர்கள்.
கன்னி

கன்னி ராசியில் சூரியன் பிரவேசிப்பது, கன்னிராசியினருக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். சூரியனின் உற்சாகவும் உத்வேகமும் உங்களுக்குள்ளும் உந்துதல் தரும். பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். உங்கள் பேச்சு, செயல்பாடு கடுமையானதாக இருந்தாலும், சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுவீர்கள். பண இழப்பு அல்லது பண வரவில் தடங்கல் ஏற்படலாம். நீங்கள் விரக்தியையும் மனச்சோர்வையும் உணர்வீர்கள். மேலும் தொழில் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
சிம்மம்

உத்தியோகத்தில் இருந்த அலட்சியப்போக்கும் மறையும், இது புதிய வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்கும். கடினமான செயல்களை கூட எளிதில் செய்து முடிக்கும் அளவு உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் அனுபவ அறிவு இப்போது அனைவருக்கும் பயன்படும். குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சிறிய விஷயங்களினால் கூட மனம் சோகமாக இருக்கும். தினசரி பணிகளை முடிப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
கடகம்

அநாவசியமாக வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுப முயற்சிகள் நல்ல பலனைத் தரும், கூட்டாக செயல்படுவதில் ஆர்வம் ஏற்படும். உடல்நலனில் அக்கறை தேவை. நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், உங்களின் வியாபாரம் சிறக்கும். நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளைத் தவிர்க்கவும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
மிதுனம்

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு கிடைக்கும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும், ஆனால் அதற்கான பட்ஜெட் கையைக் கடிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவராக இருந்தால் மனசாட்சி படி வியாபாரம் செய்ய முன்னேற்றம் ஏற்படும். வாழ்வில் அதிக அளவிலான சவால்கள் ஏற்படும். சரியான முடிவுகளை எடுப்பது கடினமாக இருக்கும்.
ரிஷபம்

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இதுவரை இருந்த அலட்சியப்போக்கு மாறும், வேற்று மொழியின மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாமியார் தரப்பிலிருந்து செல்வம் சேர வாய்ப்புள்ளது. கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். மேலும் நீங்கள் ஒரு பேராசிரியர் அல்லது ஆசிரியராக வளர முடியும். பிடித்த வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் புதிய செயல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. கவனமாக செலவு செய்ய வேண்டும்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு பெறலாம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் தேவை என்பதையும், அதற்கு சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உணவு விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால் வயிறு சார்ந்த பிரச்சினை ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
இதனையும் படியுங்கள் : நடக்கவிருக்கும் ராகுவின் நட்சத்திர மாற்றம் இனி இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தான்!


