கடக ராசியில் உருவாக இருக்கும் கஜகேசரி யோகம் இனி இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!!
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அத
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதனால் சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகும். குரு பகவான், சென்ற மே மாதம் 14ஆம் தேதி, ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியானார். இது ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இவர் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி, மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்கிறார். பின் நவம்பர் மாதம் வக்கிர பெயர்ச்சி அடைந்து மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புகிறார். குருவின் இந்த அதிசார பெயர்ச்சி காலகட்டத்தில், நவம்பர் மாதத்தில் குருபகவான் சந்திரனுடன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் பல மடங்கு பலன்களை பெற்று, வாழ்க்கையில் அனைத்தையும் அடைவார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
கஜகேசரி ராஜ யோகத்தினால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான ஈகாரமும் பாராட்டையும் பெறலாம். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலும் வியாபாரத்திலும் பெரிய முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் புதிய ஒபந்தங்கள் உருவாகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரங்களை அனுபவிப்பீர்கள். பிரச்சினைகள் தீர்வு காணும் நேரம்.
கடகம்
கஜகேசரி ராஜ யோகத்தினால் எல்லா வகையிலும் அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். திருமண தடைகள் நீங்கி, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் அதிக அளவில் பெருகும். காதலில் வலுவான பிணைபு உருவாகும்.வாகனம் வாங்குவதற்கான யோகம் உள்ளது. நிதி நிலை முன்பை விட அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உருவாகும்.
மூத்தவர்களிடமிருந்து ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கும்.
மீனம்
கஜகேசரி ராஜயோகத்தினால் பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முதலீட்டின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்வில் நிறுவி வந்த கருத்து வேறுபாடுகளும் நீங்கும். கடின உழைப்பு நிச்சய பலனளிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். மனதில் நிம்மதி காணப்படும். குடும்பத்துடன் இனிமையான நேரங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 ராகு கேது பெயர்ச்சியால் தலைவிதி மாறப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்!!