செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெற போகும் சில ராசிகள்!

செவ்வாய் கிரகம் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரையில் கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார் எனவே கடக ராசி பலவீனம் அடைகிறது ஆனால் செவ்வாய் பகவான் இந்த ராசியில் பலவீனம் ஆகுவார். ஆனாலும் கூட ஒரு சில ராசிகளுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டங்கள் நிகழப் போகிற

By ·

செவ்வாய் கிரகம் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரையில் கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார் எனவே கடக ராசி பலவீனம் அடைகிறது ஆனால் செவ்வாய் பகவான் இந்த ராசியில் பலவீனம் ஆகுவார். ஆனாலும் கூட ஒரு சில ராசிகளுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டங்கள் நிகழப் போகிறது. அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்கு அதிபதியாக செவ்வாய் கிரகம் நான்காம் இடத்தில் இருப்பதால் மேஷ ராசியினர் பல நன்மைகளை பெறுவார்கள். வீடு வாகனம் மனை போன்றவை வாங்க யோகம் ஏற்படும். தொழில் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அதிகரித்து வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ வழி கிடைக்கும்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களின் போது லாபகரமான சில தொடர்புகள் ஏற்படும் அனைத்தும் முயற்சிகளும் வெற்றி பெறும். மேலும் தொழில் மற்றும் வேலை காரணமாக அதிகமான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். கனவில் கூட நீங்கள் நினைத்து பார்க்காத ஒரு சில விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் உடன்பிறந்தவர்களுடன் இருந்த சொத்து பிரச்சனை தீரும்.

கன்னி ராசி

செவ்வாய் கிரகம் கன்னி ராசியின் லாப ஸ்தானத்தில் இருப்பதால் யோகங்கள் ஏற்படும். உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும் லாபகரமான தொடர்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்பட்டு வேலை பார்க்கும் இடத்தில் உங்களுடைய முக்கியத்துவம் அதிகரிக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களை நெருங்கி வரும் தொழிலிலும் நல்ல லாபம் காண்பீர்கள் சிறிய பணவரவு ஏற்பட்டு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்கு செவ்வாய் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் வேலை பார்க்கும் இடத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நல்ல ஊதியம் மற்றும் மரியாதை உள்ள இடத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கும் எனவே அதன் காரணமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய திருமணம் வசதியான வீட்டில் நடைபெறும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் வெளிநாட்டு பணத்தை பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.அப்பாவின் வழியில் சில சொத்துக்கள் கிடைக்கும் சொத்து தகராறு நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக அமையும். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உங்களுடைய நிறைய பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

மீன ராசி

மீன ராசிக்கு பஞ்சுமஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சமூகத்தில் நல்ல அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெறுவீர்கள். பிரபலங்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் கிடைக்கும் திறமை உள்ளவர்கள் அதற்கு ஏற்ற வேலைகள் நன்றாக செயல்படுவீர்கள். உங்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கு பல வழிகள் கிடைக்கும் குடும்பத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் எதிர்பாராத சில பண வரவுகளும் அமையும்.

இதனையும் படியுங்கள் : சுக்கிர பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full