சுக்கிரன் வக்ர பெயர்ச்சி இனி இந்த ராசிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் தான்!!
மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து கிரகங்களின் சஞ்சாரத்தால் பல மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். செல்வம், அழகு, காதல் மற்றும் ஆடம்பரத்திற்கான காரகரான சுக்கிரன், மார்ச் 2ஆம் தேதி முதல் மீன ராசியில் வக்ரகதியில் பயணிக்க உ
மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து கிரகங்களின் சஞ்சாரத்தால் பல மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். செல்வம், அழகு, காதல் மற்றும் ஆடம்பரத்திற்கான காரகரான சுக்கிரன், மார்ச் 2ஆம் தேதி முதல் மீன ராசியில் வக்ரகதியில் பயணிக்க உள்ளார். இந்த வக்ர பெயர்ச்சி சுமார் 90 நாட்கள் நீடிக்கும். சுக்கிரன் மார்ச் 2 ஆம் தேதி காலை 6:04 மணிக்கு வக்ரகதியில் பயணிக்க தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் தேதி நேர்கதியில் திரும்புவார். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சில குறிப்பிட்ட ராசியில் உச்சம், நீசம் அடைவது வழக்கம். அந்த வகையில் தற்போது மீன ராசியில் உச்ச பலனை சுக்கிர பகவான் தந்து கொண்டிருக்கிறார். இதனால் யாருக்கெல்லாம் மகத்தான வெற்றியும், நீதி நன்மைகளும் பெறுவார்கள் என தெரிந்து கொள்வோம்.
மேஷம்
சுக்கிரன் பெயர்ச்சியால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு, தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நிதி ரீதியாக, நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் நிறைய நன்மைகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் அனைத்து துறைகளிலும் வெற்றி, நிதி நிலையில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை அல்லது வணிகத்தின் முதலீடு செய்ய எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
துலாம்
உங்கள் ராசிக்கும் சுக்கிரன் பெயர்ச்சி நிதி ஆதாயம், வேலையில் முன்னேற்றம், வாழ்க்கைத் துணையின் ஆதரவை கொடுக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்ட கதவு திறந்து வெற்றியும், பணமும் குவியும். திருமண வாழ்க்கையில் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்காலம் குறித்த கவலை தீரும். உங்கள் வாழ்க்கையில் சில இடமாற்றத்தைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
தனுசு
சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு பொருள் சேர்க்கை, பதவி உயர்வு, சம்பள உயர்வு, வணிகத்தில் லாபம், வெளிநாட்டு பயண வாய்ப்புகள் உருவாகும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரக்கூடிய பெரிய ஆர்டரைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் எதிரிகளின் தொல்லை விலகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
சுக்கிரன் பெயர்ச்சியால் கும்ப ராசியினருக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன், புதிய வாகனம் வாங்கும் யோகம், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். முக்கியமாக பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய வணிக சலுகைகள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்தச் சாதகமான காலமாக அமையும்.
இதனையும் படியுங்கள் : பூரட்டாதியில் சூரியன் வருவதால் மார்ச் மாதம் அட்டகாசமாக இருக்கப் போகும் சில ராசிகள்!!