கிரகங்கள் ராஜாவான சூரியன் மார்ச் 4ஆம் தேதி மாலை 6.48 மணிக்கு தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார். சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும் இதனால் மார்ச் மாதத்தில் இந்த ராசிகள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கப் போகிறார்கள் அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்களால் நிச்சயம் வெற்றியை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிக வருமானத்தினால் நீங்கள் பயனடைவீர்கள்.
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். பயணத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய சில தொடர்புகள் வரும் காலத்தில் நல்ல ஆதாயத்தை கொடுக்கக்கூடிய வரவுகளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அமைதி அனைத்துமே காணப்படும்.
சிம்ம ராசி

சிம்ம ராசியின் அதிபதியாக இருக்கக்கூடியவர் சூரிய பகவான் எனவே சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தை நிதி ஆதாய பயன்கள் அதிகமாகவே கிடைக்கும். திருமண வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் அதற்கான கடின உழைப்பை முழுமையாக கொடுத்தால் வெற்றியை உங்கள் பக்கமே.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சூரிய பகவானின் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் எண்ணற்ற அளவில் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் உறவுகளும் வலுவடையும் இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவை பெற்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் அருள் குறைவில்லாமல் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு நிதி ஆதாயம் ஆகியவற்றை பெறுவதற்கான முழு வாய்ப்புகளும் கிடைக்கும். நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் பலன்களை கொடுக்கும் பொருளாதார நிலை வலுவடையும்.
இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள்!!


