2025 மார்ச் மாதத்தில் சூரிய பகவான், குரு பகவான், சுக்கிர பகவான், புதன் பகவான், சனி பகவான், ராகு கேது போன்ற சக்தி வாய்ந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட போவதால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். மார்ச் மாதத்தில் நடக்கப் போகின்ற சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது கும்ப ராசியில் உள்ள சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். மார்ச் மாதத்தில் நடக்கப் போகின்ற சனி பெயர்ச்சி மற்றும் மற்ற கிரக பயிற்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருந்தாலும் சில ராசிகளுக்கு பலவிதமான நன்மைகளும் கிடைக்கப் போகிறது. வியாபாரங்கள் விருத்தி அடையும் நிதிநிலை நன்றாக இருக்கும். அந்த அதிர்ஷ்டமான ராசிகளை பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி

மார்ச் மாதம் நடக்கப் போகின்ற சனிப்பெயர்ச்சி ரிஷப ராசிக்கு நன்மையை கொடுக்கும். இந்த நேரத்தில் உங்களுடைய பொருளாதார நிலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீட்டை இந்த சமயத்தில் செய்தால் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். மேலும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட உங்களுக்கு அதிகமான வாய்ப்பு கிடைக்கும்.
சிம்ம ராசி

மார்ச் 2025ல் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி சிம்ம ராசியில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் வெற்றியை கொடுக்கும். பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கும். உங்களுடைய இலக்குகளை அடைய நல்ல நேரம் ஆக இருக்கும் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய அன்புக்குரியவர்களுடனான உறவுகள் வலுப்படும்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 மார்ச் மாதத்தில் நல்ல நேரம் ஆரம்பிக்கும். புதிய வாய்ப்புகள் நிதி நன்மைகளை பெறுவீர்கள். சமூக கவுரவம் அதிகரிக்கும் தனிப்பட்ட வாழ்க்கை எனும் அன்பும் நல்லிணக்கமும் இருக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள் அதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை வியாபாரம் என அனைத்திலும் வெற்றியை பெறுவீர்கள். வாழ்க்கை இன்ப பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு ராசி

2025 மார்ச் மாதத்தில் கிரகங்களின் இந்த மாற்றத்தால் நேர்மறையான தாக்கம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சாற்றல் மேம்படும். வெற்றிக்கு வழி வகுக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் கல்வித்துறையிலும் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் உறவுகள் வலுவடையும். உங்கள் குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். இலக்குகளை அடைவீர்கள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் சரியான நேரம்.
மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி செழிப்பையும் நிலை தன்மையையும் கொடுக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைத்தால் அதற்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். செல்வத்தை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது பொருளாதார நிலைமையும் மேம்படும். நீண்டகால முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமநிலை இருக்கும். மன அமைதியை அனுபவிப்பீர்கள் உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு உங்கள் வாழ்க்கையில் இது ஒரு நல்ல நேரமாக அமையும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்


