2025 சனிப் பெயர்ச்சியால் நல்ல காலம் கிட்ட போகும் சில ராசிகள்!

நீதியின் கடவுளாக விளங்க கூடிய சனி பகவான் மக்கள் செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். தற்போது கும்ப ராசியில் உள்ள சனி பகவான் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். இதனால் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிகமான ந

By ·

நீதியின் கடவுளாக விளங்க கூடிய சனி பகவான் மக்கள் செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். தற்போது கும்ப ராசியில் உள்ள சனி பகவான் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். இதனால் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் வெற்றி கிடைக்கும். சனிபகவானுடைய பரிபூரண அருள் கிடைக்க போகும் சில அதிர்ஷ்டமான ராசிகளை பற்றி பார்க்கலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு சனி பெயர்ச்சியால் வாழ்க்கை சுபமாக அமையும். வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும் வெளி பார்க்கக்கூடிய இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு என அனைத்துமே கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து கடவுளின் அருளை பெறுவார்கள்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். பொருளாதார நிலை வலுவடையும். பிறக்கப் போகின்ற புதிய வருடம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாகவே இருக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி காரர்களுக்கு புது வருடத்தின் ஆரம்பத்தில் சனி திசையில் இருந்து விடுதலை கிடைக்கும். சனி திசை தாக்கம் குறைவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்நோக்கும் தொல்லைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும்.

மகர ராசி

மகர ராசிகாரர்களுக்கு சனிப்பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக அமையும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நிதிநிலை நன்றாக இருக்கும் பல நாட்களாக இருந்து வந்த பொருளாதார நிதி நெருக்கடி குறையும். குடும்பத்தின் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும்.

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் குடும்ப உறவுகள் வலுவடையும். உடன் பிறந்தவர்களுடன் உறவு நன்றாக இருக்கும் குழந்தைகளாளும் மனம் மகிழ்ச்சி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் ஆரோக்கியம் சிறந்து பல வெற்றிகளையும் காண முடியும்.

இதனையும் படியுங்கள் : 2025 புத்தாண்டில் சனி மற்றும் குரு அருளால் சுபிட்சம் பெற்று பொற்காலமாய் ஜொலிக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

Recipes AMP · Quick view
View full