2025ஆம் ஆண்டு பல்வேறு கிரகங்கள் பெயர்ச்சி அடைகிறது. அதிலும் நீதி கடவுளாக பெயர்ச்சி சனி கிரகமும் அடுத்தாண்டு மார்ச் மாதம் பெயர்ச்சி அடைகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு அசுப பலன்கள் ஏற்படும். அதேநேரத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் இருக்கிறது. சுப கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் 2025 -இல் மே மாதத்தில் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். பிப்ரவரி 2025 -இல் நடக்கவுள்ள குரு வக்ர நிவர்த்தி மற்றும் மே 2025 -இல் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் 2025ம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் குரு வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நல்ல லாபம் கிடைக்கலாம். இந்தாண்டு முழுவதும் உங்களுக்கு நிதி நிலை ரீதியாகவும், சொந்த தொழிலில் லாபம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. இல்லற வாழ்க்கையில் இவ்வளவு நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பழைய பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். உத்தியோக மாற்றம் செய்ய வாய்ப்பு வரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சொந்த தொழிலில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு குரு பகவானின் அருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குரு பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை தருவார். தூரத்திலிருந்து நல்ல செய்தி வர வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
சனி மற்றும் குருவின் பெயர்ச்சிகள் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த பணப் பிரச்சனைகள் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் சாதகமான நேரமாகவும், வளர்ச்சியும் கிடைக்கும். கடவுள் மீதான பக்தி அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு உருவாகும். மன அழுத்தம் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்க்ள. மாணவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.
கும்பம்
சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகள் நடக்கும். 2025ம் ஆண்டு அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். உங்கள் வேலையில் சிறப்பன முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்பம் தொடர்பாக மன கவலை, மன அழுத்தம் தீரும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். திருமண உறவு நன்றாக இருக்கும், சிலருக்கு நீண்ட நாட்கள் காத்திருந்த காதல் கைக்கூடும்.
இதனையும் படியுங்கள் : ராகு கேது பெயர்ச்சியால் 2025ல் செல்வ செழிப்போடு வாழப்போகும் ராசிகள்!