ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு கேது பாவம் நிறைந்த கிரகங்களாக கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு அல்லது கேது வலுவாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு தாவினாலும் கூட அந்த ராசிக்கு பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் ஆனால் ஒரு சில ராசிக்காரர்கள் ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் அடைவார்கள் அனைவருக்குமே அப்படி இருக்காது. அந்த வகையில் அடுத்த வருடத்தில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற போகிறது ராகு பகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு மே மாதம் 18ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். அதேபோல் கேது பகவானும் சிம்ம ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். எனவே இதனால் ஒரு சில ராசிகள் செல்வ செழிப்போடு இருப்பார்கள் அவர்களை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்கு அடுத்த வருடம் மிகவும் சிறப்பான ஒரு வருடமாக அமையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.குடும்பம் மற்றும் நண்பர்களுடைய ஆதரவு நிலையாக நிலைத்திருக்கும் இதனால் நீங்கள் புது நிறுவனத்திற்கோ புது இடத்திற்கோ வேலைக்கு செல்வீர்கள். அது மட்டும் இல்லாமல் புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புள்ளது.
மிதுன ராசி

மிதுன ராசிக்கு ராகு கேது பெயர்ச்சியால் பண புழக்கம் அதிகமாக கிடைக்கும் பழைய முதலீடுகளில் இருந்து பெரிய பலன்கள் கிடைக்கும் வணிகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் போட்டி தேர்வுகளிலும் வெற்றி கிடைக்கும்.
விருச்சிக ராசி

விருச்சிக ராசி காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் திருமணம் நீண்ட நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் .புதிய வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் செழிக்கும் அதனால் பல சுபகாரியங்களும் நடக்கும்.
மகர ராசி

மகர ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் உடன் பிறந்தவர்களால் பல ஆதாயங்கள் கிடைக்கும் உடன்பிறந்தவர்களின் உறவு பலமாகும் .பணப்புழக்கமும் உங்களிடம் அதிகமாகும் குடும்பத்தினருடனும் அல்லது நண்பர்களுடனும் அல்லது தனியாகவோ சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கேது பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?


