2025 சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் சில ராசிகள்!

2025ல் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது. சனிபகவான் மார்ச் மாதத்தில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிகமான நல்ல பலன்கள் கிடைக்கும் வெற்றியும் கிடைக

By ·

2025ல் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது. சனிபகவான் மார்ச் மாதத்தில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிகமான நல்ல பலன்கள் கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும். அந்த வகையில் வெற்றியை அடையப் போகும் சிலர் ராசிகளை பற்றி பார்க்கலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு மீனத்தில் மாறப்போகும் சனிப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அதிகமாகவே கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பை பெற முடியும். மேலும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் இருக்கும். வீட்டில் உள்ள அனைவரின் ஆதரவும் கிடைத்து மகிழ்ச்சி பொங்கும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் முழு பொறுப்புடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைத்து மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் நல்ல பலன்கள் இருந்து கொண்டே இருக்கும். மாணவர்களாக இருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். உயர்கல்வி நன்றாக அமையும். தந்தையின் சொத்துக்கள் மூலம் பெரிய நன்மைகள் கிடைக்கும் மேலும் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாகவும் புதிய வேலைகள் கிடைக்கக்கூடிய நேரங்களாகவும் இருக்கும். உங்களுடைய குழந்தைகள் மூலம் சில நன்மைகள் கிடைக்கும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் முழுமையான ஆசிர்வாதம் கிடைக்கும். 2025ல் சனிப்பெயர்ச்சியின் தாக்கத்தால் ராஜயோகம் கிடைத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும் வேலை பார்க்கும் இடத்தில் வருமானமும் பதவி உயர்வும் கிடைக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் 2025 நல்ல காலமாக அமையும் எதிர்காலத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்பத்தோடு நல்ல இணைப்பு இருக்கும் சனிபகவான் விசேஷ ஆசீர்வாதங்களை அளிப்பார். சமுதாயத்தை மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புதிய வேலை பதவி கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : சூரியன் மீது விழும் சனியின் அசுப பார்வையால் துன்பப் பட போகும் ராசிகள் இவர்கள் தான்!!

Recipes AMP · Quick view
View full