நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். இதனால் ஒவ்வொரு மாதமும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தைக் காண முடியும். மேலும் சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. கடந்த 16-ம் தேதி சூரியன் விருச்சிக ராசியில் நுழைந்துள்ள நிலையில் சனி பகவானின் அசுப பார்வை சூரியன் மீது விழவுள்ளது. சூரியன் டிசம்பர் 15 வரை விருச்சிக ராசியில் இருப்பதால் சனியின் அசுப பார்வை ஒரு மாத காலம் நீடித்திருக்கும். இதனால் சில ராசியினர் தங்கள் வாழ்வில் பல பிரச்சினைகளை சந்திக்கவுள்ளனர். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியினரின் எட்டாவது வீட்டிற்குள் சூரியன் நுழைந்துள்ளதால் இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனியும், ராகுவும் ஒரே நேரத்தில் சூரியனை பார்ப்பதால், தாயின் உடல் நிலையில் மோசமான பாதிப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உங்கள் வேலையை முடிப்பதில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கணவன், மனைவி இடையே சஞ்சலங்கள் வந்து செல்லும். உங்கள் மீது விமர்சனங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிடிவாதம் சற்று அதிகரிக்கும். பேச்சில் நிதானமும், உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
கடகம்

கடக ராசியின் ஐந்தாவது வீட்டிற்குள் சூரியன் சென்றுள்ளார். சனியின் 10-ம் அம்சம் சூரியன் மீது விழுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலைகளை முடிப்பதில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். மேலும் வேலை தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். சொந்த தொழில் முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். மன அழுத்தம் அவ்வபோது வந்து நீங்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இந்நேரத்தில் சனியின் அசுப பார்வை சூரியன் மீது விழுவதால், இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். பலவேறு சூழல்களில் பிரச்சனைகள் உருவாகும். இந்த பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய நிலை இருக்கும். வியாபாரம் தொடர்பாக சில சிரமங்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள். தந்தைவழி உறவுகளால் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதனையும் படியுங்கள் : சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சியால் இரட்டிப்பான பலன்களைப் பெற போகும் ராசிகள்!


