புதன் பெயர்ச்சியால் 2025 இல் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!!
ஜோதிட ரீதியாக 25 ஆம் ஆண்டின் தொடக்கம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் காரணம் என்னவென்றால் புதிய ஆண்டு புதன்கிழமையில் தொடங்குவதால் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழிக்கு ஏற்றவாறு புதன்கிழமை நல்ல துவக்கமாக இருக்கும். சுப கிரகமாக கருதப்படும் புதன் பகவான் ஆண்டின் தொடக்கத்தி
ஜோதிட ரீதியாக 25 ஆம் ஆண்டின் தொடக்கம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் காரணம் என்னவென்றால் புதிய ஆண்டு புதன்கிழமையில் தொடங்குவதால் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழிக்கு ஏற்றவாறு புதன்கிழமை நல்ல துவக்கமாக இருக்கும். சுப கிரகமாக கருதப்படும் புதன் பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 4-ம் தேதி விருச்சிக ராசியில் பெயர்ச்சியாக போகிறார். எனவே இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொடக்கம் மிகவும் சாதகமான பல மாற்றங்களை கொடுக்கும். புதன் சஞ்சாரம் வாழ்க்கையில் உத்தியோகத்தில் இடமாற்றத்தை ஏற்படுத்தும். புதிய வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் அனைவருடைய ஆதரவையும் பெற்று அதன் மூலம் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வீர்கள்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சாதகமான பலன்களை தரும். குழந்தைகளால் பல நன்மைகள் ஏற்படலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அதிகமாகவே கிடைக்கும். வேளை பார்க்கக்கூடிய இடத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் அதன் மூலம் உங்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் பேச்சில் இனிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு புதன் பெயர்ச்சியால் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதரவை பெற்று வியாபாரத்திலும் நல்ல மாற்றத்தை பெறுவீர்கள். லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது அதன் மூலம் நிதி ஆதாயம் அதிகமாகவே இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அதிகமான நன்மைகளை கொடுக்கும். புதனின் பெயர்ச்சியால் வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களுக்கு வெற்றி அடையும். அரசு வேலைகள் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருந்தால் லாபம் அதிகரிக்கும். கட்டிடம் மற்றும் வாகனங்கள் மூலம் இன்பம் கிடைக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சியால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் இவை தான்!!