அடுத்த மாதம் நிகழவிருக்கும் சூரிய கிரகணம் கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

இந்து மதத்தின் படி சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் அசுப பலன்களைத் தரும் என்றே நம்பப்படுகிறது.ஒரு ஆண்டில் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் என 4 முறை கிரகணங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சூரிய கிரகணம் 17 பிப்ரவரி 2026 அன்று நடைபெறும். இது தென்னாப்பிரிக்கா, தெற்கு அர்ஜ

By ·

இந்து மதத்தின் படி சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் அசுப பலன்களைத் தரும் என்றே நம்பப்படுகிறது.ஒரு ஆண்டில் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் என 4 முறை கிரகணங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சூரிய கிரகணம் 17 பிப்ரவரி 2026 அன்று நடைபெறும். இது தென்னாப்பிரிக்கா, தெற்கு அர்ஜென்டினா மற்றும் அண்டார்டிகாவில் தெரியும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இதனால் எவ்விதமான ஆபத்தும் இல்லை. இந்திய நேரப்படி பிப்ரவரி 17ஆம் தேதி பிற்பகல் 3.27 மணிக்கு ஆரம்பமாகி காலை 07.58 மணிக்கு முடிவடையும். இதற்கு சூதக்காலம் இல்லையென்றால் இதன் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம். 

மேஷம் 

இந்த காலகட்டத்தில் நீங்கள் சின்ன சின்ன கஷ்டங்களை சந்திக்க நேரிடலாம். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடலாம். முடிந்த வரைக்கும் சிக்கனமாக இருப்பது நல்லது. எந்த ஒரு வேலையை செய்தாலும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவை சந்திக்க கூடும். கடன் வாங்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். முதலீடுகளில் நஷ்டம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே பிரச்சனை அதிகரிக்கும்.

சிம்மம் 

இந்த காலத்தில் நீங்கள் வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். இந்த காலத்தில் நிதி சம்பந்தமான முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டியது நல்லது. தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் கவனமாக நடந்து கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கையில் மன அமைதி சீர்குலையும் பொறுமையாக இருப்பது நல்லது. இந்த காலத்தில் எவரையும் கண்மூடித்தனமா நீங்கள் நம்புவதை தவிர்ப்பது நல்லது.

கும்பம் 

இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள். நம்பிக்கையான ஒருவர் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. பண பிரச்சனைகள் திடீரென தலை தூக்கலாம். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம். மருத்துவ செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். அலுவலகத்திலும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் போட்டி அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : 2026ம் ஆண்டு மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம் இனி இந்த மூன்று ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!

Recipes AMP · Quick view
View full