வீட்டில் பணத்தை சேர விடாமல் தடுக்கும் தரித்திரம் நிறைந்த 10 விஷயங்கள்! முதலில் இதை தூக்கி ஏறியுங்கள்!

- Advertisement -

ஒரு சில நபர்கள் வருடம் முழுவதும் அயராது உழைத்துக் கொண்டே தான் இருப்பார்கள் அவர்களின் உழைப்பை பார்க்கும் போது நாமே வியந்து விடுவோம் ஆனால் அவர்களிடம் பணம் என்பது சேரவே சேராது. அதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் கூட காரணமாக இருக்கலாம் ஆம் நாம் வீட்டில் வைத்திருக்கும் சில பொருள்கள் நம் வீட்டிற்கு தரித்திரத்தை மட்டும் கொண்டு வந்து சேர்க்கும். இந்த பொருட்கள் எல்லாம் வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று நமக்கே கூட தெரியாமல் இருக்கும் அதனால் நம் வீட்டிற்கு வரும் பணத்தை வர விடாமல் செய்கிற தரித்திரம் நிறைந்த பத்து பொருட்களை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பணம் சேர விடமால் தரித்திரத்தை சேர்க்கும் பொருட்கள்

தற்போதைய நாட்களில் பலரது வீடுகளையும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட செருப்புகள் ஷூக்களை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி தீங்கள் பயன்படுத்தும் காலணிகளில் எப்படியும் உங்களுக்கு உபயோகமும் இல்லாத முற்றிலும் பயனற்ற பியிந்து போன அல்லது பழைய செருப்புகள், ஷூக்கள் இருக்கும். இவற்றையெல்லாம் முதலில் உங்கள் வீட்டை விட்டு தூக்கி எறிந்து விடுங்கள். இவை உங்கள் வீட்டில் செல்வ வளத்தை குறைத்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

நமது வீடுகளில் பயன்படுத்தும் துடைப்பம் விளக்கமாறு போன்றவை என்னதான் புதியதாக வாங்கினாலும் சிறிது நாட்களுக்கு அந்த பழைய துடப்பத்தை தூக்கி போடாமல் பயன்படுத்திக் கொண்டு வருவார்கள். முதலில் இப்படி செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் புதிய துடைப்பம், விளக்கமாறு வாங்கியதும் பழைய துடைப்பத்தை தூக்கி எறிந்து விடுங்கள். இது உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டத்தையும், தரித்திரத்தையும் உண்டாக்கும். மேலும் இதனால் உங்கள் வீட்டில் பணம் சேராமல் போகலாம்.

ஒரு சிலர் வீடுகளில் ஒவ்வொரு அறையிலும் கடிகாரம் மாட்டி வைத்திருப்பார்கள் அதிலும் ஒரு சில ஓடாத கடிகாரங்கள் இருக்கும் அவற்றை நினைவாக வைத்திருக்கலாம் அல்லது அழகிற்காக அப்படியே வைத்து இருக்கலாம். இப்படி இருக்கும் ஓடாத கரகாட்டங்களை முதலில் கழட்டி விடுங்கள் அல்லது சரி செய்து ஓட விடுங்கள் ஓடாத கடிகாரம் வீட்டில் வைத்து இருந்தால் அது தரித்திரத்தை தேடி தரும்.

நம் வீடுகளில் கிழிந்த துணிகளை தூக்கி போடாமல் ஒரு இடத்தில் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பார்கள். இது போல் செய்வதை தவிர்த்து விடுங்கள் முதலில் கிழிந்த துணிகளை வீட்டிலிருந்து அகற்றி விடுங்கள். அதுபோல் தீயில் எறிந்த துணிகளை வீட்டில் வைத்திருக்கவே கூடாது இது வீட்டிற்கு பீடையை சேர்த்துக் கொண்டு வரும். அதுபோல வீட்டில் காய வைத்து துணிகளை மொத்தமாக ஒரு இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள் அப்படி போட்டு வைக்கவும் கூடாது துணிகளை முறையாக மடித்து தான் வைக்க வேண்டும்.

-விளம்பரம்-

வீட்டின் ஏதாவது ஒரு இடங்களில் மின்விளக்குகள் அதாவது டியூப் லைட், குண்டு பல்பு போன்ற மின் விளக்குகள் எரியாமல் இருந்திருக்கும். நாமும் அதை சரி செய்யாமல், மாற்றாமல் அப்படியே மாட்டி வைத்திருப்போம். இது போன்ற பயன்படாத மின்விளக்குகள் இருந்தாலும் தூக்கி எறிந்து விடுங்கள் இதுவும் வீட்டுக்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

பொதுவாக நாம் வீட்டில் தலை முடிகளை கீழே போடக்கூடாது நகம் வெட்டி கீழே போடக்கூடாது என்று சொல்வார்கள். ஏனென்றால் நம் வீட்டில் தலை முடி, வெட்டிய நகங்களை கீழே போடும்போது இதுவும் நம் வீட்டிற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும். அதனால் தலைமுடிகள் நகம் போன்றவற்றை வீட்டிற்கு வெளியே வைத்து வெட்டி பழகுங்கள், வீட்டிற்குள் வைத்து வெட்டினாலும் வெளியே தூக்கி போடுவது நல்லது.

ஒரு சிலர் அவர்கள் வீட்டிலன் மிதியடியை மாற்றவே மாட்டார்கள் நீண்ட காலமாக ஒரே மிதியடியை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இப்படி செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மிதியடியை மாற்றி விடுங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். மேலும் கிழிந்து கந்தலாய் போயிருக்கும் மிதியடிகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள் முதலில் அதை தூக்கி வெளியில் போடுங்கள். அதேபோல் நம் வீட்டில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படங்களில் தூசுகள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சில வீடுகளில் மாத கணக்கில் புகைப்படங்களில் தூசி படிந்து இருக்கும் இப்படி இருக்க கூடாது.

-விளம்பரம்-

நம் வீட்டின் சமையலறையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணடி பாட்டில் போன்றவை ஒட்டை, உடைசலாக இருந்தால். இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் குறிப்பாக உடைந்த கண்ணாடி பொருட்களை வைத்திருப்பது கெட்டசக்திகளை ஈர்க்கும். அதனால் நாம் வீட்டிலும் பணவரவு குறைந்துக் கொண்டே போகும். அதுபோல சமையல் அறையில் நாம் பயன்படுத்திய எச்சி பாத்திரங்களை மொத்தமாக சேர்த்து வைக்கக் கூடாது அடிக்கடி கழுவி எடுத்துவிட வேண்டும். அதுபோல நான் சாப்பிடும் போது சமைக்கும் போது குழம்பு, சோறு கீழே சிந்தினால் அவற்றை காய விடாமல் உடனடியாக துடைத்து விட வேண்டும்.

ஒரு சிலர் அவர்களின் வீட்டில் பழைய இருப்பு கடைக்கு போடுவதற்காக சில பழைய பொருட்களை வீட்டில் சேர்த்து வைத்துக் கொண்டு இருப்பார்கள். பழைய பொருட்களை வீட்டில் மொத்தமாக சேர்த்து வைத்திருப்பது தரித்திரத்தை சேர்த்து வைப்பதற்கு சமம். அதனால் பழைய பொருட்களை வீட்டில் எப்போதும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்க கூடாது அடிக்கடி அகற்றி விடுவது மிகவும் நல்லது.

வீட்டில் துணிகள் ஈரமாக இருக்க கூடாது ஈர துணிகளை உலர வைத்து விட வேண்டும். அதனால் இந்த பத்து விஷயங்களை நீங்கள் நினைவில் கொண்டு சரியாக செய்து வந்தால் உங்களது வீட்டிலும் பணம் என்பது சேர்த்து செல்வ வளம் பெருகி கொண்டே இருக்கும். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here