Home Uncategorized தேங்காய் பால் சிக்கன் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

தேங்காய் பால் சிக்கன் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

நான் வெஜ்ல என்னதான் மட்டன் மீன் கணவாய் கருவாடு அப்படின்னு எக்கச்சக்கமாக இருந்தாலும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு நா அது சிக்கன் தான். நம்மளும் சிக்கன்ல நிறைய வெரைட்டீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனாலும் இன்னும் ஏதாவது டிஃபரண்டா செஞ்சு சாப்பிடணும் அப்படின்னு தான் நமக்கு தோனிட்டே இருக்கும். அந்த வகையில ரொம்ப சிம்பிளா ஈஸியா செய்யக்கூடிய தேங்காய் பால் சிக்கன் தான் இப்ப நம்ம பாக்க போறோம். ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு செய்ற இந்த தேங்காய் பால் சிக்கன் இட்லி தோசை சப்பாத்தி தேங்காய் சாதம் புலாவ் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.

-விளம்பரம்-

தயிர் சாதத்துக்கு எல்லாம் அல்டிமேட் ஆக இருக்கும் சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தோணும் அந்த அளவுக்கு இதோட வாசனையே சூப்பரா இருக்கும். இந்த தேங்காய் பால் சிக்கன் மார்க்கெட்டில் வைக்கக்கூடிய சிவப்பு கலர் சிக்கன் மசாலா தான் சூப்பரா இருக்கும் அத தவிர வேற எந்த மசாலாவும் போடக்கூடாது. இவ்வளவு சிம்பிளா இருக்கு ஆனா இவ்ளோ டேஸ்டா இருக்கு அப்படின்னு எல்லாரும் உங்கள பாராட்டுவாங்க அந்த அளவுக்கு இந்த தேங்காய் பால் சிக்கனோட டேஸ்ட் தரமா இருக்கும்.

வீட்ல ஒரு தடவை நீங்க இதை செஞ்சு பார்த்தா போதும் அதுக்கப்புறம் இதோட டேஸ்ட் உங்களுக்கு புடிச்சு போய் அடிக்கடி நீங்க சிக்கன் வாங்கினாலும் இதை தான் செய்வீங்க. வேற எதுவும் மெசேஜ் அதுக்கு நமக்கு தோணாது அந்த அளவுக்கு இருக்கும் இதோட டேஸ்ட். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்துட்டா டக்குனு ஏதாவது செய்யணும் அப்படின்னா கூட இந்த தேங்காய் பால் சிக்கன் நீங்க செய்யலாம்.

அவ்ளோ சூப்பரான ரெசிபி இது விருந்தாளிகளும் சாப்டுட்டு சூப்பரா இருக்கு அப்படின்னு உங்கள பாராட்டிட்டு தான் போவாங்க கூடவே இதை எப்படி செஞ்சீங்க அப்படின்னு உங்ககிட்ட ரெசிபியும் வாங்கிட்டு போவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த சூப்பரான தேங்காய்ப்பால் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

தேங்காய் பால் சிக்கன் | Coconut Milk chicken Recipe In Tamil

நம்மளும் சிக்கன்ல நிறைய வெரைட்டீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனாலும் இன்னும் ஏதாவது டிஃபரண்டாசெஞ்சு சாப்பிடணும் அப்படின்னு தான் நமக்கு தோனிட்டே இருக்கும். அந்த வகையில ரொம்பசிம்பிளா ஈஸியா செய்யக்கூடிய தேங்காய் பால் சிக்கன் தான் இப்ப நம்ம பாக்க போறோம். ரொம்பகுறைவான பொருட்கள் வச்சு செய்ற இந்த தேங்காய் பால் சிக்கன் இட்லி தோசை சப்பாத்தி தேங்காய்சாதம் புலாவ் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Coconut Milk Chicken
Yield: 5
Calories: 350kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன்
  • 4 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் சிவப்பு கலர் சிக்கன் பொடி
  • 1/2 கப் தேங்காய் பால்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறவும்
  • சிக்கன் கால் பாதத்திற்கு வெந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக பிரட்டி எடுக்கவும்
  • பிறகு அதில் வெங்காயம் தக்காளியை பொடி பொடியாக நறுக்கி அப்படியே சேர்த்து விடவும்
  • அதன் பிறகு சிக்கன் பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவும். சிவப்பு கலர் சிக்கன் பொடி மட்டுமேசேர்க்க வேண்டும்
  • தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வெந்ததும் இறுதியாக தேங்காய் பால் சேர்த்து இரண்டு நிமிடம்கழித்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 350kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Sodium: 31mg | Potassium: 380mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

-விளம்பரம்-