அடுக்கடுக்காக பல பிரச்சினைகள் நம்மை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கலாம் நாம் நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சாதாரண பிரச்சனைகள் தான் என்று உதாசீனப்படுத்திவிட்டு இருந்து விடுவோம். ஆனால் அப்படி நீங்கள் உதாசீனப்படுத்தும் சில விஷயங்களுக்கு உங்கள் வீட்டில் வாஸ்து பிரச்சனைகளுக்கும் தொடர்பு கூட இருக்கும். ஆம் உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை சரியான முறையில் அதற்குரிய திசையில் வைக்கும் போது உங்கள் வீட்டில் தொடர்ந்து நடக்கக்கூடிய பிரச்சனைகள் நிறுத்தப்படும் உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் வறுமை என்று இருக்கக்கூடிய இவையெல்லாம் விலகி உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும். அது என்னென்ன பொருட்கள் என்று நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.
கடிகாரம்
சாதாரணமாக அனைவரது வீட்டிலும் இருக்கக் கூடிய பொருள் கடிகாரம். இப்படி இந்த கடிகாரத்தை நாம் சரியான திசையில் தொங்க விடும் போது அதனால் நம் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து நல்ல பலன்கள் கிடைக்கும் ஆனால் தவறுதலாக கூட தவறான திசையில் நாம் இதை மாட்டி விடும்போது அதில் இருந்து ஏற்படக்கூடிய எதிர்மறை ஆற்றலால் நாம் பயங்கரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
கடிகாரத்தை எந்த திசையில்
அப்படி நீங்கள் உங்கள் வீட்டில் மாட்டி வைத்திருக்கும் கடிகாரத்தை எக்காரணம் கொண்டும் கதவுகள் இருக்கும் பகுதிக்கு மேல் தொங்க விடக்கூடாது. மேலும் வீட்டில் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் கடிகாரத்தை எக்காரணக் கொண்டும் மாட்டக்கூடாது. ஏனென்றால் தெற்கு திசை எமதர்ம ராஜனுக்கு சொந்தமானது. அப்போது கடிகாரத்தை எந்த திசையில் தான் தொங்கவிடுவது என்று கேட்டால் கிழக்கு மேற்கு அல்லது வடக்கு இந்த திசையில் உள்ள சுவற்றில் நீங்கள் கடிகாரத்தை தொங்கவிடும் பொழுது அது உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளி அள்ளித் தரும்.
கண்ணாடி
பொதுவாக நம்மை அலங்கரித்துக் கொள்வதற்கும் நம் முகம் பார்பதற்கும் பயன்படுத்தும் கண்ணாடி அனைவரது வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்டதை வைத்திருப்போம். ஆனால் இந்த கண்ணாடியையும் நாம் சரியான திசையில் வைக்காமல் தவறுதலான திசையில் வைக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் கெட்ட சக்திகள் நம் வீட்டில் பல பிரச்சினைகளால் நடக்கும் என்பதே உண்மை.
கண்ணாடி வைக்கும் திசை
இந்த கண்ணாடியை உங்கள் வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருப்பது போன்று வைப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும். அப்படி நீங்கள் கண்ணாடியை உங்கள் வீட்டில் வைக்கும் போது நீங்கள் கண்ணாடி வைத்திருக்கும் இடத்தின் உயரம் கண்டிப்பாக தரையில் இருந்து 4 அடிக்கு அல்லது 5 அடிக்கு மேல் இருக்க வேண்டும் இதில் சற்று கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
7 குதிரை ஒவியம்
அதைப்போல நம் வீட்டில் செல்வ வளம் பெருகுவதற்கும், வீட்டின் யோகம் கூடுவதற்கும் என சில விலங்குகளின் புகைப்படங்கள் அல்லது ஒவியங்களை வாங்கி வீட்டில் வைத்திருப்போம். அந்த விதத்தில் ஏழு குதிரைகள் இருக்கும் படியான ஓவியமோ அல்லது படங்களையோ. நீங்கள் சிறுவயதில் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள் இன்று யாரும் இதை பயன்படுத்துவதில்லை என்றாலும் முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளிலும் கடைகளிலும் இந்த ஏழு குதிரைகள் கொண்ட ஓவியம் இருக்கும். இது நம் வீட்டில் இருக்கும் போது நம் வீட்டில் நேர்மறையான சக்திகள் இருப்பதோடு மட்டுமில்லாமல் நமது வீட்டின் செல்வ வளங்களை பெருக்கிக் கொண்டே இருக்கும்.
குதிரை படம் வைக்க வேண்டிய திசை
இப்படி நீங்கள் வீட்டில் மாட்டும் குதிரை ஓவியத்தை உங்கள் வீட்டின் நுழைவு வாசலுக்கு நோக்கி இருக்கும்படி மட்டும் தொங்க விடக்கூடாது. அதைப்போல் உங்கள் வீட்டின் சமையலறையும் குளியலறையும் பார்த்தவாறு இந்த ஓவியம் அல்லது குதிரை படம் இருக்கக்கூடாது இந்த ஏழு குதிரைகள் இருக்கும் படத்தையோ அல்லது ஓவியத்தையோ ஜன்னலுக்கு எதிர் புறமாக இருக்கும் இடத்தில் தொங்க விடுவது சிறந்ததாக இருக்கும்.