Home சைவம் ஆந்திரா கோவைக்காய்ப் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி கோகை்காய் வாங்குவீர்கள்!

ஆந்திரா கோவைக்காய்ப் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி கோகை்காய் வாங்குவீர்கள்!

கோவக்காய், சத்துக்கள் நிறைந்த காய்கறி தான். கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் சரும நோய்களான அனைத்தையும், இந்த கோவைக்காய், குணமாக்குகிறது.

-விளம்பரம்-

ஆனால் பெரும்பாலும் இதை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வது கிடையாது. வாரத்தில் ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இந்த காயை கொடுக்கலாம். ருசி மிகுந்த ஆந்திர கோவைக்காய்ப் பொரியல்  சுலபமாக எப்படி நம் கையால் வீட்டிலேயே செய்திடலாம்.

 சதா ஒரே காய்கறி வகைகளை பொரியல் செய்து கொடுத்து அழுத்து போனவர்களுக்கு கோவக்காய் போன்ற வித்தியாசமான காய்கறிகளை செய்து கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் சாப்பிட்டு விடுவார்கள். சுவையான காரசாரமான ஆந்திர கோவைக்காய்ப் பொரியல் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

Print
No ratings yet

Andhra Ivy Gourd Fry Recipe In Tamil

வாரத்தில்ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருக்கும் இந்த காயை கொடுக்கலாம். ருசி மிகுந்த ஆந்திர கோவைக்காய்ப் பொரியல்  சுலபமாக எப்படி நம் கையால் வீட்டிலேயே செய்திடலாம். சதா ஒரே காய்கறி வகைகளை பொரியல் செய்து கொடுத்துஅழுத்து போனவர்களுக்கு கோவக்காய் போன்ற வித்தியாசமான காய்கறிகளை செய்து கொடுத்து பாருங்கள்,தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் சாப்பிட்டு விடுவார்கள். சுவையான காரசாரமான ஆந்திரகோவைக்காய்ப் பொரியல் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்கஇருக்கிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry
Cuisine: andhra
Keyword: Andhra Ivy Gourd Fry
Yield: 2
Calories: 21kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • கிலோ கோவைக்காய்
  • உப்பு தேவைக்கு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு

அரைக்க

  • 10 சின்ன வெங்காயம்
  • 8 மிளகாய் வற்றல்

செய்முறை

  • காய்களைக் கழுவி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள்.வெங்காயத்தின் தோலை நீக்கி வையுங்கள்.
  • 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றலை லேசாக வறுத்து பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைத்து ஒன்றிரண்டாக அரைத்து வையுங்கள்.
  • தண்ணீர் சேர்க்கக் கூடாது. மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகை தாளித்து, நறுக்கிய காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள்.
  • முக்கால் பதம் வெந்ததும் மூடியை நீக்கிவிட்டு வெங்காயக் கலவையைச் சேருங்கள். பச்சை வாடை நீங்கி, கலவை வதங்கி சுருண்டதும் இறக்குங்கள்.
  • சுவையான ஆந்திர கோவைக்காய்ப் பொரியல் தயார்!!

Nutrition

Serving: 500g | Calories: 21kcal | Carbohydrates: 3.4g | Protein: 1.4g | Fat: 0.4g | Potassium: 30mg | Fiber: 1.6g | Vitamin A: 14IU | Calcium: 25mg | Iron: 0.9mg