Advertisement
சைவம்

மாதம் ஒரு முறையாது ஹெல்தியான அகத்தி பூ பொரியல் இப்படி வீட்டில் செய்து பாருங்கள்!

Advertisement

மார்க்கெட்டுகளில் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள் அகத்திக் கீரை. இதில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக அகத்திக் கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக் கொண்டது. இன்னொன்று சிவப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகின்றன. அகத்திக்கீரையைப் போல அகத்திப்பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அகத்திப்பூவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் அதிக பலத்தை தருகிறது. அகத்திக்பூக்கள் சற்றுப் பெரியதாக இருக்கும். இவற்றை யாரும் சரியாக உணவாக உட்கொள்வதில்லை.

இவற்றை கீரையுடனும் சமைத்து சாப்பிடலாம். தனியாக கூட்டு வைத்தும் சாப்பிடலாம். வெயிலில் அதிகமாக உழைப்பவர்களுக்கும், கண் எரிச்சல், தலைச்சுற்றல், சிறுநீரில் மஞ்சள் நிறமாக போவது போன்ற பாதிப்புகளுக்கு அகத்திப்பூக்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். பித்தம், சளித்தொல்லை, தும்மல் ஆகியவற்றை நீக்கும் சக்தி அகத்திப்பூக்களுக்கு உண்டு. உடல்சூடு, மூலநோய், வாதம், கீழ்வாதம், மார்புச்சளி ஆகிய நோய்களை அகத்திப்பூக்கள் குணமாக்கும். இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள அகத்தி பூ வைத்து ஒரு பொரியல் செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும் அளவிற்கு அற்புதமான சுவையுடன் இருக்கும். வாரம் ஒரு முறை இந்த அகத்தி பூ பொரியலை செய்து கொடுங்கள். அடுத்த நாளைக்கு என்ன பொரியல் செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும்.

Advertisement

அகத்தி பூ பொரியல் | Agathipoo Poriyal Recipe In Tamil

Print Recipe
மார்க்கெட்டுகளில் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள் அகத்திக் கீரை. இதில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக அகத்திக் கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக் கொண்டது. இன்னொன்று சிவப்பு நிற பூக்களை
Advertisement
கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகின்றன. அகத்திக்கீரையைப் போல அகத்திப்பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள அகத்தி பூ வைத்து ஒரு பொரியல் செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும் அளவிற்கு அற்புதமான சுவையுடன் இருக்கும். வாரம் ஒரு முறை இந்த அகத்தி பூ பொரியலை செய்து கொடுங்கள்.
Course LUNCH, poriyal
Cuisine Indian
Keyword Agathipoo Poriyal
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 40

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

Ingredients

  • 300 கி சிகப்பு அகத்தி பூ
  • 1 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க :

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

Instructions

  • முதலில் அகத்தி பூக்களை பறித்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அகத்தி பூவை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு இறுதியாக தேங்காய் துருவல், மல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் அகத்திப்பூ மசாலா பொரியல் தயார். இந்த பொரியல் மிகவும் சத்துக்கள் நிறைந்தது.

Nutrition

Serving: 350g | Calories: 40kcal | Carbohydrates: 3g | Protein: 28g | Fat: 3g | Sodium: 65mg | Fiber: 2g | Vitamin A: 160IU | Vitamin C: 40mg | Calcium: 8mg | Iron: 15mg

இதனையும் படியுங்கள் : அவசியம் வாரம் ஒரு முறை ருசியான அகத்திக்கீரை கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

8 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

15 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

24 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago