ஆந்திரா ஸ்டைல் ஆலு பிந்தி ஃப்ரை அனைத்து உணவிற்கும் சைடு டிஷ்ஷா செய்து சாப்பிட்டு பாருங்கள்!!

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால், கோங்குரா, வெண்டைக்காய் மசாலா போன்றவை தான் மிகவும் பிரபலமானவை. வழக்கமான மதியம் குழம்பிற்கு, ஒரே மாதிரியான பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்ட

By Prem Kumar · 25/11/2025

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால், கோங்குரா, வெண்டைக்காய் மசாலா போன்றவை தான் மிகவும் பிரபலமானவை. வழக்கமான மதியம் குழம்பிற்கு, ஒரே மாதிரியான பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் எளிதாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக உருளைக்கிழங்கு வெண்டைக்காய் வைத்து இந்த சுவையான ஆலு பிந்தி ஃப்ரை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

பொதுவாக வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம். இதனை குழந்தைகளிடம் சாப்பிட வைக்க பக்குவமாக சமைத்தால் அந்த வழுவழுப்புத்தன்மை இல்லாமல் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். இந்த வெண்டைக்காய் ரெசிபியுடன் நாம் வறுத்த மசாலாவை சேர்த்து மிக எளிதாக 20 நிமிடங்களுக்குள் செய்து விடலாம். இதனைத் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ருசியாக இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் அதே சமயம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இப்போது ஆந்திராவில் செய்யக்கூடிய ஆலு பிந்தி ஃப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை பருப்பு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

Recipes AMP · Quick view
View full