- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- andhra, Indian
- Course
- Side Dish
இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால், கோங்குரா, வெண்டைக்காய் மசாலா போன்றவை தான் மிகவும் பிரபலமானவை. வழக்கமான மதியம் குழம்பிற்கு, ஒரே மாதிரியான பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் எளிதாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக உருளைக்கிழங்கு வெண்டைக்காய் வைத்து இந்த சுவையான ஆலு பிந்தி ஃப்ரை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
பொதுவாக வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம். இதனை குழந்தைகளிடம் சாப்பிட வைக்க பக்குவமாக சமைத்தால் அந்த வழுவழுப்புத்தன்மை இல்லாமல் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். இந்த வெண்டைக்காய் ரெசிபியுடன் நாம் வறுத்த மசாலாவை சேர்த்து மிக எளிதாக 20 நிமிடங்களுக்குள் செய்து விடலாம். இதனைத் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ருசியாக இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் அதே சமயம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இப்போது ஆந்திராவில் செய்யக்கூடிய ஆலு பிந்தி ஃப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை பருப்பு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வறுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து வெண்டைக்காயை சேர்த்து முக்கால் பாகம் வெந்ததும் எடுத்து கொள்ளவும்.
பின் அதே நெய்யில் உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, வெண்டைக்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான உருளை வெண்டைக்காய் ஃப்ரை தயார்.






