Advertisement
காலை உணவு

கமகமனு சூப்பரான ஆலு தோசை இப்படி செய்து கொடுத்தால் வயிறு நிறைய நிறைய சாப்பிடுவாங்க!

Advertisement

இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் தோசை தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் மசாலா தோசை தென்னிந்திய உணவில் மிகவும் பிரபலம். தோசை என்றாலே பலருக்கும் கொள்ளை பிரியம் தான் அதுவும் நன்றாக சிவந்த மொரு மொருவென்ற தோசையைதட்டில் வைத்து அதற்கு சாம்பார் சட்னி கொண்டு வந்து வைத்தால் போதும். அப்படியே அந்த தோசைக்கு அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு தோசை பிரியர்கள் அதிகம். தினமும் காலையில் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஏதாவது வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இன்று காலை உணவை ரசித்து ருசித்து சாப்பிட கூடிய ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகிறோம்.

அதுவும் உருளைக்கிழங்கை வைத்து மிகவும் சுவையான Breakfast செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். தோசையை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். அதிலும் தோசைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடக்கூடிய வகையில் ஒருசில தோசைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் உருளைக்கிழங்கு தோசை. காய்கறிகளில் உருளைக்கிழங்கு மிகவும் சுவையானதும் சத்தும் மிகுந்தது. இதில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் கலோரிகளும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு தோசையை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Advertisement

ஆலு தோசை | Aloo Dosa Recipe In Tamil

Print Recipe
இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் தோசை தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா
Advertisement
தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் மசாலா தோசை தென்னிந்திய உணவில் மிகவும் பிரபலம். தோசை என்றாலே பலருக்கும் கொள்ளை பிரியம் தான் அதுவும் நன்றாக சிவந்த மொரு மொருவென்ற தோசையைதட்டில் வைத்து அதற்கு சாம்பார் சட்னி கொண்டு வந்து வைத்தால் போதும். அப்படியே அந்த தோசைக்கு அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு தோசை பிரியர்கள் அதிகம். தினமும் காலையில் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். அந்த வகையில்
Advertisement
இன்று காலை உணவை ரசித்து ருசித்து சாப்பிட கூடிய ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகிறோம்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword Aloo Dosa
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 110

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 தோசை கல்

Ingredients

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் கடலை மாவு
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
  • 2 பெரிய உருளைக்கிழங்கு

Instructions

  • முதலில் கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதன் தோளை உரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இந்த உருளைக்கிழங்கை‌ நாம் கலந்து வைத்த மாவில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை வார்த்து வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆலு தோசை தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 110kcal | Carbohydrates: 6.2g | Protein: 3g | Fat: 1.8g | Potassium: 310mg | Fiber: 2g | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 3.1mg

இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான கொய்யாக்காய் சட்னி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

15 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

16 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

17 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

20 மணி நேரங்கள் ago