Home சைவம் எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான ஆலு கோபி மசாலா ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான ஆலு கோபி மசாலா ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ஆரம்ப காலங்கள்ல வட இந்திய உணவுகள் விருப்பப்பட்டு உண்ண ஆரம்பிக்கும் பொழுது எல்லாரும் விருப்பப்பட்டு சாப்பிட்ட ஒரு உணவு அப்படின்னா அது ஆலு கோபி தான். இந்த ஆலு கோபி மசாலா மேல அப்படி ஒரு விருப்பம் எல்லாருக்குமே இருந்தது. இதை ஜப்பாத்தி கூட ரொட்டி கூடவும் பரோட்டாஸ் கூடவும் நெய் சாதம் கூடவும் சேர்த்து சாப்பிட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க.

-விளம்பரம்-

அப்படிப்பட்ட ஆலு கோபி மசாலாவை எப்படி வீட்ல ரொம்பவே சுலபமா அதேசமயம் சுவையா செய்வது எப்படி இந்த பதிவுல பார்க்க இருக்கோம். இந்த ஆலு கோபி மசாலா குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை எல்லாராலும் விருப்பப்பட்டு சாப்பிடபடும் ஒரு உணவு. காய்கறிகளை பிடிக்காத குழந்தைகள் இருந்தா கூட அவங்க இந்த மாதிரி ஆலு கோபி மசாலாவ மிஸ் பண்ணவே மாட்டாங்க. இந்த ஆலு கோபி மசாலாவை பார்த்ததுக்கு அப்புறம் தான் காய்கறிகள எப்படி கலந்து சமைக்கணும் அப்படிங்கறது ஒரு புது வழி கிடைத்தது. வீட்ல ரெண்டு மூணு காய்கறிகள் இருக்கும் ஆனால் அது நம்ம எப்படி செய்றது ரெண்டு காய் செய்தா யாரும் சாப்பிட மாட்டாங்க.

அப்படி யோசிக்கிற டைம்ல எல்லாம் இந்த ரெண்டு காய்களில் எந்த காய்களை ஒன்றாக சேர்த்து சமைச்சா நல்லா இருக்கும்னு யோசிக்க வச்சது இந்த ஆலு கோபி மசாலா ஒரு காரணம். அப்படி சுவையான இந்த ஆலு கோபி மசாலா ஹோட்டல் ஸ்டைலில் எப்படி வீட்டில் அதே சுவையில் செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்க இருக்கோம்.

Print
5 from 1 vote

ஆலு கோபி மசாலா | Aloo Gobi Masala Recipe In Tamil

ஆலுகோபி மசாலாவை எப்படி வீட்ல ரொம்பவே சுலபமா அதேசமயம் சுவையா செய்வது எப்படி இந்த பதிவுல பார்க்க இருக்கோம். இந்த ஆலு கோபி மசாலா குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை எல்லாராலும் விருப்பப்பட்டு சாப்பிடபடும் ஒரு உணவு. காய்கறிகளை பிடிக்காத குழந்தைகள் இருந்தா கூட அவங்க இந்த மாதிரி ஆலு கோபி மசாலாவ மிஸ் பண்ணவே மாட்டாங்க. இந்த ஆலு கோபி மசாலாவை பார்த்ததுக்கு அப்புறம் தான் காய்கறிகள எப்படி கலந்து சமைக்கணும் அப்படிங்கறது ஒரு புது வழி கிடைத்தது. வீட்ல ரெண்டு மூணு காய்கறிகள் இருக்கும் ஆனால் அது நம்ம எப்படி செய்றது ரெண்டு காய் செய்தா யாரும் சாப்பிட மாட்டாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: mumbai
Keyword: Aloo Gobi Masala
Yield: 4
Calories: 131kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 காலிஃப்ளவர்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1/4 கப் தயிர்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1 ஸ்பூன் கஸ்தூரிமேத்தி
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சைமிளகாய்
  • 1 வெங்காயம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் காலிஃபிளவரை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  பிறகுஉருளைக்கிழங்கை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  
     பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு கப்பில் தயிர், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சீரகம் பொடியாக நறுக்கிய இஞ்சி , பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
     
  •  பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  •  வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தயிரில் கலந்து வைத்துள்ள மசாலாக்களை சேர்த்து நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.
  •  மசாலா நன்றாக கொதித்து வரும் பொழுது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு காலிஃப்ளவரை சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
  • ஆலு கோபி மசாலா நன்றாக வெந்து வந்த பிறகு அதில் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான ஆலு கோபி மசாலா தயார். இந்த ஆலு கோபி மசாலா ரோட்டி, சப்பாத்தி, பரோட்டா, நெய் சாதத்துடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 131kcal | Carbohydrates: 7g | Protein: 1.8g | Fat: 0.5g | Potassium: 405mg | Calcium: 32mg | Iron: 2.2mg

இதையும் படியுங்கள்: ரொம்ப சிம்பிளான காஷ்மீரி ஆலூ இப்படி செஞ்சி பாருங்க! கறி குழம்பு கூட தோத்து போய்டும்!