Home சைவம் ரொம்ப சிம்பிளான காஷ்மீரி ஆலூ இப்படி செஞ்சி பாருங்க! கறி குழம்பு கூட தோத்து போய்டும்!

ரொம்ப சிம்பிளான காஷ்மீரி ஆலூ இப்படி செஞ்சி பாருங்க! கறி குழம்பு கூட தோத்து போய்டும்!

உருளைக்கிழங்கை வைத்து வெறும் குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. சூப்பரா ஒரு வெள்ளை புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு ரிச்சான இந்த காஷ்மீரி ஆலூ செய்யுங்க. அவ்வளவு ருசியா இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்துவிடலாம்.

-விளம்பரம்-

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இதைத் தவிர்த்து குருமா வகைகள் செய்யலாம். ஆனால் அசைவ வகைகளை எடுத்துக் கொண்டால் இதற்கு பல வகையான சைடு டிஷ் களை செய்யலாம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் சப்பாத்தி, பூரி இதற்கெல்லாம் ஏற்ற ஒரு அருமையான காஷ்மீரி ஆலூ  எப்படி ரொம்ப சிம்பிளா அதிக டேஸ்ட்டா செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுக்கு என்ன தான் வகை வகையான சைடு டிஷ்கள் இருந்தாலும் கூட,காஷ்மீரி ஆலூ வைத்து சாப்பிடும் போது கூட ரெண்டு சாப்பிடவே செய்வார்கள். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் சப்பாத்தி, பூரி இதற்கெல்லாம் ஏற்ற ஒரு அருமையான காஷ்மீரி ஆலூ எப்படி ரொம்ப சிம்பிளா அதிக டேஸ்ட்டா செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

காஷ்மீரி ஆலூ | Kashmiri Aloo Recipe in Tamil

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்குஏதாவது சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இதைத் தவிர்த்து குருமாவகைகள் செய்யலாம். ஆனால் அசைவ வகைகளை எடுத்துக் கொண்டால் இதற்கு பல வகையான சைடு டிஷ்களை செய்யலாம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் சப்பாத்தி, பூரி இதற்கெல்லாம்ஏற்ற ஒரு அருமையான காஷ்மீரி ஆலூ  எப்படி ரொம்பசிம்பிளா அதிக டேஸ்ட்டா செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன்வகைகளுக்கு என்ன தான் வகை வகையான சைடு டிஷ்கள் இருந்தாலும் கூட,காஷ்மீரி ஆலூ வைத்துசாப்பிடும் போது கூட ரெண்டு சாப்பிடவே செய்வார்கள். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில்சப்பாத்தி, பூரி இதற்கெல்லாம் ஏற்ற ஒரு அருமையான காஷ்மீரி ஆலூ எப்படி ரொம்ப சிம்பிளாஅதிக டேஸ்ட்டா செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, Side Dish
Cuisine: Kashmiri
Keyword: Kashmiri Aloo
Yield: 4
Calories: 410kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 1/2 கப் தக்காளி விழுது
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
  • 1/2 தேக்கரண்டி மல்லிப் பொடி
  • 1/2 தேக்கரண்டி சீரகப் பொடி
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா பொடி
  • 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • கறிவேப்பிலை சிறிது
  • மல்லித் தழை சிறிது
  • எண்ணெய் தேவையானஅளவு

செய்முறை

  • தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் போட்டு அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பொடி வகைகள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும், எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் உருளைக்கிழங்கைப் போட்டு கிளறவும்.
  • சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்க விடவும். 2 நிமிடம் உருளைக்கிழங்கை வேக விடவும். பிறகு மல்லித் தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
  • சுவையான காஷ்மீரி ஆலூ தயார்.

Nutrition

Serving: 800g | Calories: 410kcal | Carbohydrates: 14g | Protein: 21g | Fat: 2g | Cholesterol: 11mg | Sodium: 1.7mg | Potassium: 383mg | Fiber: 8g | Sugar: 0.3g | Calcium: 2mg