Advertisement
சைவம்

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில்ஆலு மேத்தி கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு, அதற்கேற்ப கிரேவி செய்யத்தெரியாது.

ஆனால் சுவையான கிரேவி செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் ஆலு, மேத்தி வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க.

Advertisement

ஆலு மற்றும் மேத்தி கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு கிரேவி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த ஆலு மேத்தி கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த ஆலு மேத்தி கிரேவி பஞ்சாபி சுவையில் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆலு மேத்தி கிரேவி | Aloo Methi Gravy Recipe In Tamil

Print Recipe
இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் ஆலு மேத்தி கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் ஆலு, மேத்தி வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. ஆலு
Advertisement
மற்றும் மேத்தி கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு கிரேவி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த ஆலு மேத்தி கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும்.
Course dinner
Cuisine Indian
Keyword Aloo Methi Gravy
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 164

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 4 உருளைக்கிழங்கு
  • 1 கட்டு வெந்தயக்கீரை
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
    Advertisement
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி

Instructions

  • முதலில் வெந்தயக்கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் உருளை கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து விடவும். அதன்பிறகு நறுக்கி வைத்துள்ள வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கி, கொஞ்சமாக தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பின் கரம் மசாலத்தூள், கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான ஆலு மேத்தி கிரேவி தயார். இந்த ஆலு மேத்தி கிரேவியை சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 164kcal | Carbohydrates: 3.7g | Protein: 4.6g | Fat: 2g | Sodium: 8mg | Potassium: 420mg | Fiber: 4g | Vitamin A: 4IU | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 9.2mg

இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

6 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago