நாளை சண்டே ஸ்பெஷலாக ஆம்பூர் ஸ்டைல் காளான் பிரியாணி இப்படி செய்து பாருங்க!

பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி' இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாகது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்

By Prem Kumar · 6/4/2024

பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி’ இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாகது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன், காளான் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப் படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில் வேறுபட்ட சுவையுடன் இருக்கும். ஆனால் ஆம்பூர் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்காக இந்த ஆம்பூர் காளான் பிரியாணி ரெசிபி.

காளானில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் இந்த ஆம்பூர் காளான் பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த ஆம்பூர் காளான் பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம். வாருங்கள் இந்த ஆம்பூர் காளான் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் காளான் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full