காரசாரமான ருசியில் காளான் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு நிகராகவும் இருக்கும். காளான் வைத்து சுவையான மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன் என்று பல விதங்களில் சேமித்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் காளான் வைத்து மிளகு பிரட்டல் ரெசிபியை காண உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் மிளகு பிரட்டல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் சப்பாத்தி மட்டும் இல்லாமல் சாதத்துக்கு மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-
Print
No ratings yet

காளான் மிளகு பிரட்டல் | Mushroom Milagu Pirattal Recipe In Tamil

நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். காளான் வைத்து சுவையான மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன் என்று பல விதங்களில் சேமித்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் காளான் வைத்து மிளகு பிரட்டல் ரெசிபியை காண உள்ளோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Mushroom Milagu Pirattal
Yield: 4 People
Calories: 51kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பாக்கெட் காளான்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சோம்பு தூள்
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 3 வர ‌மிளகாய்
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் காளானை சுத்தம் செய்து, நறுக்கி சூடான தண்ணீரில் போட்டு பின் தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், தக்காளி வதங்கியதும் சோம்பு தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கலந்து உப்பு சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடவும்.
  • பின் மிளகு தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான காளான் மிளகு பிரட்டல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 51kcal | Carbohydrates: 2.6g | Protein: 5.2g | Fat: 2g | Sodium: 6mg | Potassium: 448mg | Fiber: 2.7g | Vitamin C: 5.29mg | Calcium: 18mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : காளான் தொக்கு இப்படி செய்து பாருங்க!

- Advertisement -