Home சைவம் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் இட்லி, தோசைக்கு பக்காவான நெல்லிக்காய் துவையல் இப்படி செய்து பாருங்க!

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் இட்லி, தோசைக்கு பக்காவான நெல்லிக்காய் துவையல் இப்படி செய்து பாருங்க!

பொதுவா எல்லா கிராமங்களிலும் சாப்பாட்டுக்கு குழம்பு வைக்க நேரம் இல்லனா ஏதாவது ஒரு துவையல் செஞ்சு வெறும் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடுவாங்க… நகரங்களையும் இப்போ அது மாதிரி சாப்பிட தான் செய்றாங்க ஆனாலும் கிராமங்கள்ல அம்மில வச்சு அரைச்சு அந்த தொகையில சாப்பிட்டா இன்னும் கூடுதல் சுவை ஆகும் மணமாகவும் இருக்கும். அந்த வகையில் நிறைய துவையல் செஞ்சு சாப்பிடுவாங்க உதாரணமா தேங்காய் துவையல் பருப்பு துவையல் மல்லி துவையல் புதினா துவையல் கொள்ளு துவையல் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

-விளம்பரம்-

அதே மாதிரி உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியம் தரக்கூடிய நெல்லிக்காயில் இப்ப நம்ம துவையல் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருக்கு அப்படின்னு நம்மளுக்கு தெரியும். இந்த நெல்லிக்காய் ல ஜூஸ் போட்டு குடிச்சி இருப்போம் இல்லனா உப்பு மிளகாய் தூள் போட்டு காரசாரமா சாப்பிட்டு இருப்போம். ஆனா நெல்லிக்காயில் துவையல் செய்து சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனா ஒரு தடவை நம்ம இந்த நெல்லிக்காய்ல துவையல் செய்து சாப்பிட்டுட்டோம்னா இந்த சுவை நம்ம நாக்கிலேயே இருக்கும் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவோம்.

நகரங்கள்ல கூட இப்போ ஒரு சில வீட்ல அம்மிக்கல் இருக்கு அந்த மாதிரி அம்மிக்கல் வீட்ல இருக்கிறவங்க இந்த தொகைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்காமல் கையில அரைச்சு ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க அந்த சுவைக்கு நீங்க அடிமை ஆகிடுவீங்க. வைட்டமின் சி நெல்லிக்காய்ல அதிகமா இருக்கிறதால குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த நெல்லிக்காய் ரொம்பவே நல்லது. குழம்பு வைக்க உங்களுக்கு டைம் இல்லனா இந்த நெல்லிக்காய் துவைகளை டக்குனு செஞ்சு சாப்பிட்டு பாருங்க இதுக்கு சைட் டிஷ் கூட தேவையில்லை. இப்ப வாங்க இந்த நெல்லிக்காய் துடைகள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

நெல்லிக்காய் துவையல் | Amla Thuvayal Recipe In Tamil

உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியம் தரக்கூடிய நெல்லிக்காயில் இப்ப நம்ம துவையல் எப்படி செய்வது என்றுபார்க்க போறோம். இந்த நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருக்கு அப்படின்னு நம்மளுக்குதெரியும். இந்த நெல்லிக்காய் ல ஜூஸ் போட்டு குடிச்சி இருப்போம் இல்லனா உப்பு மிளகாய்தூள் போட்டு காரசாரமா சாப்பிட்டு இருப்போம். ஆனா நெல்லிக்காயில் துவையல் செய்து சாப்பிட்டுஇருக்க மாட்டோம். ஆனா ஒரு தடவை நம்ம இந்த நெல்லிக்காய்ல துவையல் செய்து சாப்பிட்டுட்டோம்னாஇந்த சுவை நம்ம நாக்கிலேயே இருக்கும் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Amla Thuvayal
Yield: 4
Calories: 19kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 பெரிய நெல்லிக்காய்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் பெரிய வெங்காயம் இஞ்சி நெல்லிக்காய் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் சீரகம் மிளகு அனைத்தையும் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் பெரிய வெங்காயம் இஞ்சி நெல்லிக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.நெல்லிக்காய்மற்றும் வெங்காயம் வதங்கியவுடன் தேங்காய் துருவல் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துஒரு நிமிடத்திற்கு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  
    பிறகு அனைத்தையும் ஆறவைத்து அம்மி இருந்தால் அம்மையில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.அம்மி இல்லாதவர்கள்மிக்சி ஜாரில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும் அம்மியில் அரைத்தாலும்மிகவும் வழவழப்பாக அரைக்க கூடாது கொஞ்சம் கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
  • பிறகு சுவையான மணமான சூப்பரான நெல்லிக்காய் துவையல் தயார். வெறும் சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்அல்லது மற்ற கலவை சாதத்திற்கும் குழம்பு சாதத்திற்கும் கூட சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்காம்பினேஷன் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 19kcal | Protein: 2g | Fiber: 2g | Vitamin C: 180mg

இதையும் படியுங்கள் : சுடு சோறுடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட ருசியான கருவேப்பிலை நெல்லி பொடி இப்படி செய்து!